உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

இளங்குமரனார் தமிழ் வளம் – 10

இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் மேற் சொல்லப்பட்ட பாக்களுக் கெல்லாம் எய்துவதோர் பொதுவிலக்கணம் கூறிற்று. (இ - ள்.) மேற் சொல்லப்பட்ட பாக்களுக்கு உரிய அடிகள் விரித்துக் கூறியவாறு அல்லாமல் பிறவாறு நடக்குமாயினும் அவற்றை ஒருசார் ஒப்பு நோக்கி அவ்வியலுள் அமைத்துக் கொள்க என்றவாறு.

இன்னதற்கு இன்ன இலக்கணம் என வகுத்த பாவுள்ளும் இனத்துள்ளும் சற்றே மிக்கும் குறைந்தும் வருமெனினும் ஒரு சார் ஒப்புமை நோக்கி அப் பாவினுள்ளும் இனத்தினுள்ளும் அமைத்துக் கொள்க என்று கூறினாராயிற்று.

இவ்வாறே பிறரும்,

“மிக்கும் குறைந்தும் வரினும் ஒருபுடை ஒப்புமை நோக்கி ஒழிந்தவும் கொளலே"

என்றும்,

66

"ஒத்த அடியினும் ஒவ்வா விகற்பினும் மிக்கடி வரினும் அப்பாற் படுமே

என்றும் கூறினார்.

-யா. வி. 93.

(அவிநயனார்) யா-75.93.மேற்)

இப் புற நடையால் ஒரு பாவின்கண் பிறிதொரு பாவின் அடி மயங்கி வருதலும் அமைத்துக் கொள்க.

66

(கலிவிருத்தம்)

“கோழியும் கூவின குக்கில் அழைத்தன

T

தாழியுள் நீலத் தடங்கணீர் போதுமினோ ; ஆழிசூழ் வையத் தறிவன் அடியேத்திக்

கூழை நனையக் குடைதும் குளிர்புனல் ஊழியும் மன்னுவாம் என்றேலோர் எம்பாவாய்’

-யா. வி. 98 மேற். -யா. கா. 43 மேற்.

இது நாற்சீர் ஐந்தடியான் வந்தது. நாற்சீர் நாலடியான் வருவது கலிவிருத்தம். ஓரடி மிக்குவரினும் கலிவிருத்தத்தின் பால் அமைத்துக்கொள்க.