உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை பாடினியம்

(குறள் வெண்பா)

“அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோ டைந்துசால் பூன்றிய தூண்"

301

-திருக். 983.

என்றும் எண்ணுப்பயின்று வருதலால் எண்ணு வண்ணம் ஆயிற்று. 16. அகைப்பு வண்ணம் : விட்டு விட்டுச் சேறல் அகைப்பு வண்ணம் ஆகும். என்னை?

66

“அகைப்பு வண்ணம் அறுத்தறுத் தொழுகும்”

என்றார் ஆகலின்.

66

'வாரா ராயினும் வரினும் அவர்நமக்

கியாரா கியரோ தோழி”

-தொல்.செல்.227

-குறுந். 110.

இஃதறுத் தறுத்துச் சேறலால் அகைப்பு வண்ணம் ஆயிற்று. 17. தூங்கல் வண்ணம் : வஞ்சியுரிச்சீர் பயின்று வருவது

தூங்கல் வண்ணம் ஆகும். என்னை?

66

"தூங்கல் வண்ணம் வஞ்சி பயிலும்"

என்றார் ஆகலின்.

"வசையில்புகழ் வயங்குவெண்மீன்

திசைதிரிந்து தெற்கேகினும்

தற்பாடிய தளியுணவிற்

புட்டேம்பப் புயன்மாறி

மலைத்தலைய கடற்காவிரி”

வான்பொய்ப்பினும் தான்பொய்யா

-தொல். செய். 228.

-பட்டினப்பாலை. 1-6.

இது வஞ்சி பயிலுதலால் தூங்கல் வண்ணம்.

18. ஏந்தல் வண்ணம் : சொல்லிய சொல்லில் சிறந்து

வருவது ஏந்தல் வண்ணமாகும். என்னை?

66

“ஏந்தல் வண்ணம்,

சொல்லிய சொல்லிற் சொல்லியது சிறக்கும்

என்றார் ஆகலின்.

99

-தொல். செய். 229.