302
இளங்குமரனார் தமிழ் வளம் – 10
ஏந்தலாவது மிகுதல்; சொல்லிய சொல்லே பல்கால்
வருதல்.
(குறள் வெண்பா)
"சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்
-திருக். 200. து
சொல் என்னும் சொல்லே பல் கால் வந்தமையால்
ஏந்தல் வண்ணம்.
19. உருட்டு வண்ணம் : அராகத் தொடையாக வருவது உருட்டு வண்ணம் ஆகும். என்னை?
'உருட்டு வண்ணம் அராகம் தொடுக்கும்”
என்றார் ஆகலின்.
66
‘தாதுறு முறிசெறி தடமல ரிடையிடை
தழலென விரிவன பொழில்
-தொல். செய். 230.
-தொல். செய். 65 பேரா. மேற்.
இஃதராகம் தொடுத்தமையால் உருட்டுவண்ணம் ஆயிற்று. 20. முடுகு வண்ணம் : நாற்சீரடியின் மிக்கு அராக நடைய தாக வருவது முடுகு வண்ணம் ஆகும். என்னை?
66
'முடுகு வண்ணம் முடிவறி யாமல்
அடியிறந் தொழுகி அதனோர் அற்றே'
என்றார் ஆகலின்.
-தொல். செய். 231.
“நெறியறி செறிகுறி புரிதிரி பறியா
வறிவனை முந்துறீஇ”
-கலி. 39.
அளவடியின் மிக்கு அராகமாக வந்ததால் முடுகுவண்ணம் ஆயிற்று.
இனி வண்ணங்களை நூறு என எண்ணுவாரும் உளர். (யா. வி; யா. கா.) அவற்றையெல்லாம் யாப்பருங்கல விருத்தியுள் கண்டு கொள்க. இனி ஒழிந்தனவற்றையும் யாப்பருங்கல விருத்தி யுள்ளும், தொல்காப்பியத்துள்ளும் பிறவற்றுள்ளும் கண்டு கொள்க.
பொதுவியல் முற்றும்.
காக்கை பாடினியமும் அதற்குப்
ப
புலவர் இராமு இளங்குமரன் இயற்றிய சிற்றுரையும் முற்றும்.