உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கை பாடினியம்

15

உதாரண வாய்பாட்டான் ஓசையூட்டும் பொழுது செப்ப லோசை பிழைக்கு மென்பதூஉம், ஆண்டுச் சீருந் தளையும் சிதையவாராமையின் அளபெடுப்பனவும் அல்ல; அள பெடுப்பினும் அளபெடைகள் அலகு காரியம் பெறுவனவும் அல்ல என்பதூஉம் காக்கை பாடினியார் முதலாகிய தொல்லாசிரியர் துணிவு; அதுவே 'இந் நூலுடையார்க்கும் உடன்பாடு என்பது குணசாகரர் விளக்கவுரை. (யா. கா. 8.)

ஓர் இலக்கணத்தைக் கூறி அதற்குரிய இலக்கிய முத னினைப்பு உணர்த்துதல் காக்கைபாடினியார் மதமாகும் என்பது குணசாகரர் உரையாலும் (யா.வி.) மயிலைநாதர் உரையாலும் புலனாகின்றது.

சீர்கட்கு முதனினைப்புக் கூறிய காரிகையில் இவ்வாறு பிறரும் இலக்கியங்களை முதலடுக்கிச் சொன்னாரும்

உளரெனக் கொள்க. என்னை?

66

“குன்று கூதிர் பண்பு தோழி

விளியிசை முத்துறழ் என்றிவை எல்லாம் தெளிய வந்த செந்துறைச் செந்துறை”

என்றார் காக்கை பாடினியார்” என்றார் குணசாகரர். இந் நூற்பாவை,

“ஓங்கெழில் முதலாக்,

குன்று கூதிர் பண்பு தோழி

விளியிசை முத்துற ழென்றிவை யெல்லாந்

தெளிய வந்த செந்துறைச் செந்துறை'

எனக் காட்டி, இதனுள் ஓங்கெழில், என்புழி, ‘ஓங்கெழில் அகல்கதிர் பிதிர்துணி மணிவிழ முந்நீர் விசும்பொடு பொரு தலற' என்னும் பாட்டும், குன்று என்புழி, ‘குன்று குடையாக் குளிர்மழை தாங்கினான்' என்னும் பாட்டும், பண்பு என்புழி, ‘பண்பு கொள் செயல் மாலை' என்னும் பாட்டும், தோழி என் புழி, ‘தோழி வாழி தோழிவாழி. வேழமேறி வென்ற தன்றியும்’ என்னும் பாட்டும், விளியிசை என்புழி, 'விளியிசைப்ப விண்ணக இவ்வாறே, 'ஒருசார் வெண்பாவினுள் வஞ்சியுரிச்சீர் வந்தனவாலோ எனின் திரு வள்ளுவப்பயன், நாலடி நானூறு முதலாகிய கீழ்க் கணக்குள்ளும் முத்தொள்ளாயிரம் முதலாகிய பிறசான்றோர் செய்யுளுள்ளும் வஞ்சியுரிச்சீர் வாராமையாலும் வெண்பாவினுள் வஞ்சியுரிச்சீர் வருக என்னும் ஓத்தில்லாமையாலும் வேற்றுத்தளை வெண்பாவினுள் விரவாமையாலும் இத்தொடக்கத்தன குற்றமல்லது குணமாகாதென்பது காக்கை பாடினியார் முதலாகிய தொல்லாசிரியர் துணிவு; இதுவே இந்நூலுடையார்க்கும் உடன்பாடு என்பதுவும் கருதத்தக்கது.

1.

(யா.கா.38 உரை)