உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

இளங்குமரனார் தமிழ் வளம் – 10

நடுங்க' என்னும் பாட்டும், முத்துறழ் என்புழி, ‘முத்துற ழகவந் தேங்கி' என்னும் பாட்டும் குறிப்பினான் முன்னின்ற மொழியான் அறிய வந்தன." என்று முதனினைப்பை விளக்கி எழுதுகின்றார் மயிலைநாதர். (நன். 268) இலக்கணத்தைத் தொகுத்துரைத்தல் காக்கைபாடினியார் மதம் என்பது யாப்பருங்கல விருத்தியால் புலப்படுகின்றது. “தொல்காப் பியப்புலவோர் தோன்ற விரித்துரைத்தார் பல்கா யனார்பகுத்துப் பன்னினார் – நல்யாப்புக் கற்றார் மதிக்கும் கலைக்காக்கை பாடினியார் சொற்றார்தம் நூலுள் தொகுத்து’”

என்பது விருத்தியுடையார் காட்டிய பாட்டு.

காக்கைபாடினியார் தாம் இயற்றிய நூலை விரித்துக் கூறாது தொகுத்துக் கூறினாராயினும் விரித்துரைக்க வேண்டும் இடத்து விரித்துச் செய்தார் என்பதைக் கொச்சகக்கலி வகைகளை விரித்துக் கூறுமாற்றான் உணரலாம்.

ஒரு யாப்புறவின் சிறப்புண்மை, சிறப்பின்மை ஆகியவை விளங்குமாறு தனித்தனி நூற்பாக்களில் முறையே காட்டுவது காக்கைபாடினியார் கைக்கொண்ட சீரிய நெறி என்பதைக் ‘கழிநெடிலடி'க்கு அளவு கூறிய வகையால் அறியலாம்.

கற்பார்க்கு இவ் வகையால் மயக்க முண்டாம் என்று நுழை புலத்தால் உணர்ந்து அம் மயக்கம் நேரா வண்ணம் நூற்பா யாத்தலை மேற்கொண்டவர் காக்கை பாடினியார் என்பது,

“நெடிலொடு நெடிலும் நெடிலொடு குறிலும்

இணையசை யாதல் இலவென மொழிப

என ஓதிய நூற்பாவால் அறியலாம். குறிலிணையும், குறில் நெடில் இணையும் இணையசை (நிரையசை) எனக் கற்பார் நெடிலிணையையும், நெடில் குறில் இணையையும் இணையசை எனக் கொள்ளலாமோ என ஐயுறவால் வினாவுதலும் கற்பிப்பார் ஐயமகற்றலும் வெள்ளிடை. இதனை உணர்ந்து நூற்பா யாத்த சீர்மை காக்கைபாடினியார் தம் நுண்ணுணர்வுக்குச் சான்றாம்.

யாப்பருங்கல விருத்தியுடையார் காக்கை பாடினியார் புலமைத் திறத்தில் தம் நெஞ்சைப் பறிகொடுத்துப் பல்கால் பாராட்டுகின்றார். காக்கை பாடினியார் முதலாகிய ‘தொல்லாசிரியர்’ என்றும் (பக். 58), ‘காக்கை பாடினியார் முதலிய மாப்பெரும்