காக்கை பாடினியம்
17
புலவர்' என்றும் (பக். 101) ‘காக்கை பாடினியார் முதலாகிய மாக்கவிப் புலவோர்' என்றும் (பக். 430) ‘நல்யாப்புக் கற்றார் மதிக்கும் கலைக்காக்கை பாடினியார்’ என்றும் (பக்.19) அவர் பாராட்டும் சீர்மை உளங்கொளத் தக்கதாம்.
காக்கை பாடினியார் பெண்பாற் புலவர் என்பது அவர் தம் பெயரானே தெள்ளிதின் அறியப் பெறுகின்றது. பாடுவதையே தொழிலாகக் கொண்ட பழந்தமிழ்க் குடியினர் பாணர் எனப் பெற்றனர். அவர்களுள், ‘பாணன்’ என்னும் ஆண்பாற் பெயர்க்கு அமைந்த பெண்பாற் பெயர் ‘பாடினி' என்பதாம். இதனை, "இளையோர் சூடார் வளையோர் கொய்யார் நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான் பாடினி அணியாள்"
என ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனைக் குடவாயிற் கீரத்தனார் பாடிய பாட்டால் (புறம். 242) அறியலாம். அன்றியும்,
“புறம்பெற்ற வயவேந்தன்
மறம்பாடிய பாடினியும்மே
ஏருடைய விழுக்கழஞ்சிற்
சீருடைய இழைபெற்றிசினே;
இழைபெற்ற பாடினிக்குக்
குரல்புணர்சீர்க் கொளைவல் பாண்மகனும்மே”
என்னும் இளவெயினி பாட்டும்,
66
“வாடா மாலை பாடினி அணியப்
பாணன் சென்னிக் கேணி பூவா எரிமருள் தாமரைப் பெருமலர் தயங்க
என்னும் கூகைக் கோழியார் பாட்டும், “புரிமாலையர் பாடினிக்குப்
பொலந்தாமரைப் பூப்பாணரொடு கலந்தளைஇய நீளிருக்கையால்”
என்னும் கயமனார் பாட்டும்,
புறம். 11.
- புறம். 364.
―
- புறம். 361.