காக்கை பாடினியம்
31
6. உயிர்மெய்யாவது உயிரும் மெய்யும் கூடிய எழுத்து அவை பன்னீருயிரும், பதினெட்டு மெய்யும் உறழப் பிறந்த ருநூற்றுப் பதினாறு எழுத்துக்களுமாம். என்னை?
“உயிர்ஈ ராறே மெய்ம்மூ வாறே
அம்மூ வாறும் உயிரொடும் உயிர்ப்ப இருநூற் றெருபத் தாறுயிர் மெய்யே"
என்றார் ஆகலின்.
-தொல். எழுத்து. 17.
7. வலிய என்பது வல்லின எழுத்து. அவை க, ச, ட, த, ப, ற, என்பன. என்னை?
“வல்லெழுத் தென்ப கசட தபற
என்றார் ஆகலின்.
-தொல். எழுத்து. 18.
8. மெலிய என்பது மெல்லின எழுத்து. அவை ங, ஞ, ண, ந, ம, ன என்பன. என்னை?
“மெல்லெழுத் தென்ப ஙஞண நமன
என்றார் ஆகலின்.
- தொல். எழுத்து.20.
9. இடை டைமை மை என்பது இடையின எழுத்து. அவை ய, ர, ல, வ, ழ, ள என்பன என்னை?
66
இடையெழுத் தென்ப யரல வழள
-தொல். எழுத்து. 21
என்றார் ஆகலின்.
10. ஆய்தம் என்பது ஆய்த எழுத்து. அஃகேனம் எனினும், ஆய்தம் எனினும், தனிநிலை எனினும், புள்ளி எனினும், ஒற்று எனினும் ஒக்கும். என்னை?
66
அஃகேனம் ஆய்தம் தனிநிலை புள்ளி ஒற்றிப் பால ஐந்தும் இதற்கே”
என்றார் ஆகலின்.
-யா. கா. 4. மேற்.
11. இ என் குறுக்கம் என்பது இகரம் என்பதன் குறுக்க மாகிய குற்றியலிகரம். அது குற்றியலுகரம் திரிந்தும் திரியாதும் யகரமோடு இயைதலால் வந்த இகரம். குற்றியலுகரம் ஆறு வகையாக வருமாகலின் அவற்றின் திரிபால் வரும் இகரமும்