32
இளங்குமரனார் தமிழ் வளம் – 10
ஆறாம். 'மியா' என்னும் அசைக் சொல்லின் வழியாகத் திரி பின்றி வரும் இகரம் ஒன்றாம். என்னை?
“யகரம் வரும்வழி இகரம் குறுகும் உகரக் கிளவி துவரத் தோன்றாது'
என்றும்,
“குற்றிய லிகரம் நிற்றல் வேண்டும்
யாவென் சினைமிசை உரையசைக் கிளவிக்
காவயின் வரூஉம் மகரம் ஊர்ந்தே”
என்றும் கூறினார் ஆகலின்.
எடுத்துக் காட்டு:
-தொல். எழுத்து. 84.
நாகியாது, வரகியாது, தெள்கியாது, எஃகியாது, கொக்கி யாது, குரங்கியாது-ஆறுவகைக் குற்றிய லுகரத்தின் மேலும் யகரம் இயை தலால் திரிந்துவந்த குற்றியலிகரம். ஒழிந்த வல் லெழுத்துக்களுக்கும் இவ்வாறே கண்டு கொள்க.
கேண்மியா, சென்மியா-மியா என்னும் அசைச்சொல் வழியாகத் திரியாது வந்த குற்றியலிகரம்.
12. உ என் குறுக்கம் என்பது உகரம் என்பதன் குறுக்க மாகிய குற்றிய லுகரம் என்றவாறு. அது தனிக் குற்றெழுத் தல்லாத மற்றை எழுத்துக்களுக்குப் பின்னே மொழிகளின் இறுதியில் வல்லின மெய்களின்மேல் ஏறி நிற்கும் உகரம். அஃது ஆறு வகைப்படும். அவையாவன: ஈரெழுத் தொருமொழி, உயிர்த் தொடர்மொழி, இடைத் தொடர்மொழி, வன்றொடர் மொழி, மென்றொடர் மொழி, ஆய்தத் தொடர்மொழி என்பன. என்னை? “ஈரெழுத் தொருமொழி உயிர்த்தொடர் இடைத்தொடர் ஆய்தத் தொட்ர்மொழி வன்றொடர் மென்றொடர் ஆயிரு மூன்றே உகரங் குறுகிடன்'
என்றார் ஆகலின்.
(எ-டு):
நாகு, காசு, காடு, காது, காபு, காறு
-தொல். எழுத்து. 406.
-ஈரெழுத்தொரு மொழி.
- உயிர்த்தொடர் மொழி.
- இடைத்தொடர் மொழி.
வரகு, பலாசு, முருடு, எருது, துரபு, கயிறு
ஆய்கு, ஆய்சு, ஆய்து, ஆய்பு