காக்கை பாடினியம்
37
‘வேறல கெய்தும்' என்றார் என்க. அன்றி, இவை அளபெழுங்கால் நேரசையாய் அல்லாமல் நிரையசையாய் அலகிடப் பெறாவோ எனின் பெறா என்பது அறிவித்தற்கும் என்க.
என்னை?
66
'இருவகை மருங்கினும் மெய்யள பெழினே நிரைநேர் நேர்நேர் ஆகுதல் அன்றி
நிரை நிரை நேர்நிரை ஆகுதல் இலவே"
-யா. கா. 36 மேற். என்றார் ஆகலின். மேற்காட்டிய எடுத்துக்காட்டுக்களை நேர் நிரை என அலகூட்டின் விளமுன் நிரையாகி வெண்ட ளை பிழைபடுதல் காண்க.
"வேறலகெய்தும்” என்று அமையாரால் விதியின ஆகும் என்றது பயனில் உரையாம் எனின், அற்றன்று ; ஈரொற்றுட னிலையாய் நிற்பன இவைபோல அலகு பெறுமோ? என்பார் உளராயின், ‘பெறாது' என்பது அறிவித்தற்கு இது வேண்டும் என்க. இவை, ஓரெழுத்து அளபெடுத்தலால் அதற்கு அடையாள மாக ஈரெழுத்தாய் அமைந்தவை என்பதையும், அவை இருவேறு ஒற்று எழுத்துக்கள் கூடி உடனிற்பவை என்பதையும் கருதி, இவற்றுள் வேற்றுமை அறிக.
66
(குறள் வெண்பா)
'துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை.
وو
-திருக். 42.
தனுள் ஈரொற்றுடனிலை அலகுபெறாமை காண்க. அலகு பெறின் மூவசைச் சீரும் நாலசைச் சீரும் ஆகி வெண்டளை பிழை படுதல் அறிக.
இனி, இதனால் அளபெழா ஆய்தம், ஒற்றெழுத்தின் பயத்தவாய் நிற்பதொடு இடைவிலக்கி அலகிடப் பெறுவதும் காள்க.
(குறள் வெண்பா)
“அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கு மாறு.
―
- திருக். 943.
இதனுள் அஃதுடம்பு என்பதிலுள்ள ஆயுத எழுத்தை விலக்கி அலகிடாக்கால், மாமுன்நேராகி நேரொன்றாசிரியத்