காக்கை பாடினியம்
நெடிலொடு நெடிலும் நெடிலொடு குறிலும் இணையசை ஆதல் இலவென மொழிப் என்றார் காக்கைபாடினியார் என்று விருத்தியுடையார்) காட்டினார் என்க.
ஐகாரத்திற்குச் சிறப்பு விதி
7. ஐயென் நெடுஞ்சினை ஆதி ஒழித்தல கெய்தும் இணையசை என்றிசி னோரே.
51
(யாப்பருங்கல
-யா. வி. 9 மேற்.
இந்நூற்பா என்ன கூறிற்றோ எனின் ஐகாரம் சீரின் இடையும் கடையும் வரின் இணையசையாம் என்பது கூறிற்று. (இ-ள்) ஐகாரம் என்னும் நெட்டெழுத்து, சீரின் முதலிடம் அன்றி மற்றை இடை, கடை இடங்களில் வருமாயின் பின்னும் முன்னும் உள்ள எழுத்துக்களுடன் இணைந்து இணை
யசையாகும் என்று அறிந்தோர் கூறுவர் என்றவாறு.
இவ்வாறு கூறவே சீர் முதல் நிற்கும் ஐகாரம் தனியசையாம் என்றும், இடையும் கடையும் வரும் ஐகாரம் தன்னோடோ, பிற எழுத்துக்களோடோ இணைந்து வருங்கால் இணையசையாம் என்றும் கூறினார் என்க.
இது சொல்லவேண்டிய தென்னையோ? எனின், ஐகாரம் நடிலாகலின் ஐகாரம் இணைந்து வரும் டங்களில் நெடிலொடு நெடிலாகவோ, ஐகாரத்தின் பின் குறில் வரும் இடங்களில் நெடிலொடு குறிலாகவோ அலகிட்டுத் தனியசை என்ன வேண்டுமோ என்னின் அது வேண்டா; அஃதிணையசையே என்று அறுதியிட்டுரைத்து ஐயம் அறுத்தற்கு இச் சிறப்பு விதி யாத்தார் என்க.
ஐகாரம் நெட்டெழுத்தாய் இருக்க இவ்விதிவிலக்கப் பெறுமாறு என்னை? எனின், ஐகாரம் நெட்டெழுத்தே எனினும் சீரின் இடையும் கடையும் வருங்கால் தன் நெடில் அளவில் குறைவுற்றுக் குறிலளவாகி ஐகாரக் குறுக்கம் எனப் பெயர் பெறும். என்னை?
66
(குறள் வெண்பா)
குறுமை எழுத்தின் இயல்பேஐ காரம் நெடுமையின் நீங்கியக் கால்'
என்றார் ஆகலின்.
-யா. வி. 9 மேற். -யா. கா. 36 மேற்.