உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 10.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

இளங்குமரனார் தமிழ் வளம் – 10 ♡

ஆயின் ஐகாரம் குறிலாமோ? எனின், ஆகாது ; அளவால் குறுகி நின்றதன்றிக் குறில் ஆமாறு இல்லை. அதனான் அன்றே குறில் என்னாது, ‘குறுக்கம்' என்றார் என்க. குறுகிய ஒலியளவைத் தனக்கியல்பாக உடையது குறில் ; குறித்த இடங்களில் தன் அளவில் குறுகி ஒலிப்பது குறுக்கம் ; இவை வேறுபாடு என்க. இனி ஒருசார் ஆசிரியர், ஐகாரம் தன்னை ஒலிக்கும் இடம் ஒன்றுமே அன்றிச் சொல்லோடு வருமிடத்து அதன் மூவிடங் களிலும் குறுகியே ஒலிக்கம் என்பர். இவர் இரண்டிடங்களைக் கொண்டார். இவ்வாறே,

“இடையும் கடையும் இணையும்ஐ யெழுத்தே”

என்றார் சிறுகாக்கை பாடினியார்.

-யா. வி. 9 மேற்.

(எ - டு.)

(குறள் வெண்பா)

66

'அன்னையையான் நோவ தவமால் அணியிழாய் புன்னையையான் நோவன் புலந்து”

-யா. வி. 9 மேற். -யா. கா. 36 மேற்.

இதனுள் ‘ அன்னையையான்' ‘புன்னையையான்' என்னும் ஈரிடங்களிலும் சீர்நடுநின்ற ஐகாரங்கள் இணைந்து இணையசை யாகிக் 'கூவிளங்காய்' என அலகுபெற்றமை அறிக. இவ்வாறு அலகிடாக்கால் நாலசைச் சீராகி வெண்பா யாப்புப் பிழைபடுதல்

காண்க.

(குறள் வெண்பா)

"கெண்டையை வென்ற கிளரொளி உண்கண்ணாள் பண்டையள் அல்லள் படி

யா. வி. 9 மேற். -யா. கா. 36 மேற்.

இதனுள் 'கெண்டையை' என்னும் இடத்துச் சீர்க் கடைக்கண் நின்ற ஐகாரங்கள் இணைந்து இணையசை ஆயதும், ‘பண்டையள்’ என்பதில் சீரிடை நின்ற ஐகாரம் குறிலுடன் இணைந்து இணை யசை யாயதும் காண்க. இதனுள் ஐகாரங்களையும் குறிலையும் தனியசை எனக் கொண்டு காய்ச்சீராக அலகிடப் பெறினும் காய் முன் நேர் என்னும் வெண்டளை யாப்புறவு கெடா தன்றே என்பார் உளராயின், இது து பொது விதி என்றறிக. இவ்விதி