காக்கை பாடினியம்
75
நின்றசீர் அன்றி வருஞ்சீரையும் இயற்சீரெனக் குறித்துக் கூறினார் ; எனினும் பிற சீர்களையும் கொள்க. தளை கொள்வது நின்றசீர் ஈறும், வருஞ்சீர் முதலும் ஆகலின். என்னை?
"இவர் வருஞ்சீரும் குறித்துக் கூறினார் அன்றோ எனின், அவர் அவை சிறப்புடைமை நோக்கி எடுத்து ஓதினார் ; அல்லாத சீரும் உடம்பட்டார் எனக் கொள்க என்றார் யாப்பருங்கல விருத்தியுடையார்.
இயற்சீர் வெண்டளை
17. இயற்சீர் இரண்டு தலைப்பெயல் தம்முள் விகற்ப ' நடையது வெண்டளை யாகும்.
-யா. வி. 18, 21 மேற்.
-யா. கா. 10 மேற்.
இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் இயற்சீர் விகற்பத்தால் நடக்கும் வெண்டளையின் இலக்கணம் கூறிற்று.
-
ள்.) இயற்சீர் இரண்டு தம்முள் கூடுங்கால் ஒன்றாது நடக்குமாயின் அஃது இயற்சீர் வெண்ட ளை ள எனப்படும் என்றவாறு.
இயற்சீர் ஒன்றுதலால் ஆகும் ஆசிரியத்தளை இலக்கணம் முன்னே கூறினார் ஆகலின், அதன் விகற்பத்தால் ஆகும் இயற் சீர் வெண்டளையினை அதிகார முறைமையாற் கூறினார்.
விகற்பமாவது மாவது ஒன்றாமை. ஒன்றாமை. நின்றசீரும் வருஞ்சீரும் ஒன்றாமையாவது, மாமுன் நிரையும், விளைமுன் நேரும் வருதல் ஆகும். ஆகவே மாச்சீர்முன் நிரை வருதலும் விளச்சீர்முன் நேர் வருதலும் ஆகிய இரண்டும் இயற்சீர் வெண்டளை என்க.
ய
ள
ஈரசைச்சீர் என்பது இயற்சீர் ஆகலானும்; இயற்சீர் விகற் பத்தாலாய இத்தளை வெண்பாவிற்கு உரியது ஆகலானும் இயற்சீர் வெண்டளை எனக் காரணக் குறி பெற்றது.
இயற்சீர் ஒன்றுதலை நேரொன்றாசிரியத்தளை, நிரை யொன்றாசிரியத்தளை என என இரண்டாகப் பகுத்தாற்போல இயற்சீர் விகற்பமாவதையும் இரண்டாகக் குறியிடாமல் ஒன்றாக்கியதென்னை? எனின் தொல்லாசிரியர் நெறி அஃதாகலின்
என்க.
(பா.வே.) 1. வகையது.