76
(எ - டு.)
இளங்குமரனார் தமிழ் வளம் – 10
(குறள் வெண்பா)
“பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்
திருக். 1128.
இக்குறள் வெண்பாவில் இயற்சீர் வெண்டளைகளே வந் தமையை அலகிட்டுக் காண்க. இஃது இயற்சீரொடு இயற் சீர்களே வந்த பா.
66
(குறள் வெண்பா)
'இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
-திருக். 100.
இக்குறள் வெண்பாவில் இயற்சீர் வெண்டளையும், காய் ஈற்று உரிச்சீர் ஒன்றுதலால் பிறக்கும் வெண்சீர் வெண்டளையும் விரவி நிற்றல் காண்க. இஃது இயற்சீரும் உரிச்சீரும் விரவி வந்த பா.
வெண்சீர் வெண்டளை
18. உரிச்சீர் அதனுள் உரைத்ததை அன்றிக் கலக்கும் தளையெனக் கண்டிசி னோரே.
-யா. வி. 21 மேற்.
-யா. கா. 10 மேற்.
இந் நூற்பா என்ன கூறிற்றோ எனின் நிறுத்த முறையான் வெண்சீர் வெண்டளை கூறிற்று.
உ
- ள்.) வெண்பா உரிச்சீரினுள், மேலே இயற்சீர் விகற்பம் உரைத்தவாறு அல்லாமல் ஒன்றி நிற்பது வெண்சீர் வெண்டளை என்று யாப்பியல் ஆய்ந்தோர் கண்டனர் என்றவாறு.
இயற்சீர் வெண்டளையைக் கூறினார் ஆகலின் அதிகார முறைமையால் அவ்வெண்பாவிற்குச் சிறப்புரிமை பூண்ட வெண் சீர் வெண்டளையை அடுத்துக் கூறினார்.
‘உரைத்ததை’ என்றது இயற்சீர் விகற்பத்தினை. ‘அன்றி’ என்றது அவ்வாறல்லாமல் ஒன்றி நிற்றலை. எதனோடு ஒன்றுதல் எனின் உரிச்சீரோடு ஒன்றுதல். ஆகவே காய்ச்சீர்முன் நேர் வருதல் வெண்சீர் வெண்டளை எனக் கொள்க.