உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

இளங்குமரனார் தமிழ்வளம்

11

(265) “தொடலைக் குறுமகள் தந்தாள் மடலொடு

மாலை உழக்குந் துயர்"

திருக்குறள் 1135.

25. அருளுடையாள் என்றல் என்பது நின்குறை முடித்துத் தருவேன் தலைவி அருளுடையாள் என்று தோழி கூறுதல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(266) “பைந்நா ணரவன் படுகடல் வாய்ப்படு நஞ்சமுதாம் மைந்நாண் மணிகண்டன் மன்னும் புலியூர் மணந்தபொன்னிம் மொய்ந்நாண் முதுதிரை வாயா னழுந்தினு மென்னின்முன்னும் இந்நா ளிதுமது வார்குழ லாட்கென்கண் இன்னருளே'

66

(267) “ஓங்கும் பெரும்புகழ்ச் செங்கோல்

உசிதன் உறுகலியை

99

நீங்கும் படிவென்ற கோன்வையை வாய்நெடு நீரிடையான்

தாங்கும் புணையொடு தாழுந்தண்

பூம்புனல் வாயொழுகின்

ஆங்கும் வருமன்ன தாலின்ன

நாளவள் ஆரருளே"

-

- திருக்கோவையார் 81.

பாண்டிக்கோவை 100.

(268) "தலைப்புணைக் கொளினே தலைப்புணைக் கொள்ளும்

கடைப்புணைக் கொளினே கடைப்புணைக் கொள்ளும் புணைகை விட்டுப் புனலோ டொழுகின்

ஆண்டும் வருகுவள் போலும் மாண்ட மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச்

செவ்வெரிந் உறழுங் கொழுங்கடை மழைக்கண்

துளிதலைத் தலைஇய தளிரன் னோளே'

குறுந்தொகை 222.

26. தழைகோடல் என்பது தலைவன் தந்த தழையைத்

தோழி ஏற்றுக் கொள்ளுதல். அதற்குச் செய்யுள் வருமாறு :