உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

91

(269) “தோலாக் கரிவென்ற தற்குந் துவள்விற்கு

மில்லின் தொன்மைக் கேலாப் பரிசுள வேயன்றி

யேலேம் இருஞ்சிலம்ப

மாலார்க் கரிய மலர்க்கழ

லம்பல வன்மலையிற்

கோலாப் பிரசமன் னாட்கைய

நீதந்த கொய்தழையே "

திருக்கோவையார் 110.

(270) “கைந்நிலத் துச்சிலை யாற்கணை சிந்திக் கறுத்தெதிர்ந்தார் செந்நிலத் துப்படச் சீறிய கோன்செழுந் தண்பொதியில் இந்நிலத் திம்மலை மேலவொவ் வாவிருந் தண்சிலம்பா எந்நிலத் தெம்மலை மேலஇச் சந்தனத் தீர்ந்தழையே”

பாண்டிக்கோவை 145.

(271) "அடுந்திறல் வேழம் அகற்றி யெம்வயிற்

கடுந்துயர் ஒழித்தனை ஆதலின் மடந்தை கண்ணு மேனியும் புரையும்

தண்ணறுங் குவளையொடு தழைதந் தீமே”

பொருளியல் 46)

27. குறிப்பறி வுறுத்தல் என்பது தானறிந்த படியைத் தலைமகட்குப் புலனாகாமை மறைத்துத் தலைமகளுழைச் சென்று சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(272) “வரிசேர் தடங்கண்ணி மம்மர்கைம்

மிக்கென்ன மாயங்கொலோ

வெரிசேர் தளிரன்ன மேனிய னீர்ந்தழை யன்புலியூர்ப்

புரிசேர் சடையோன் புதல்வன்கொல்

பூங்கணை வேள்கொலென்னத் தெரியே முரையான் பிரியான் ஒருவனித் தேம்புனமே"

(273) “கொடியார் நெடுமதிற் கோட்டாற் றரண்கொண்ட கோன்பொதியிற்

1. கைந்நிலத் துக்கணை யால்சிலை உந்தி.

- திருக்கோவையார் 83.