உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

நன்பூம் புனமகலான் நாமதற்குச் செய்வதுமற் றென்பூங் குழலாய் இயம்பு

99

93

கிளவித்தெளிவு.

28. வலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தல் என்பது என்னையும் நோக்கி அலவனையும் நோக்கித் தம்முணர் வொழியப் போனார் ஒரு(வ)ரெனச் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு:-

(279) “நீகண் டனையெனின் வாழலை

நேரிழை யம்பலத்தான்

சேய்கண் டனையன்சென் றாங்கோ ரலவன்றன் சீர்ப்பெடையின்

வாய்வண் டனையதொர் நாவற்

கனிநனி நல்கக்கண்டு

பேய்கண் டனையதொன் றாகிநின்

றானப் பெருந்தகையே”

(280) “பாடுஞ் சிறைவண் டறைபொழிற்

பாழிப்பற் றாவரச

ரோடுந் திறங்கண்ட கோன்'கொல்லிக்

கான லுறுதுணையோ

டாடு மலவற் புகழ்ந்தென்னை

நோக்கி 'அறிவொழிய

நீடு நினைந்துசென் றானென்ன லாங்கொர் நெடுந்தகையே”

(281) 3“நெருந லிவ்வழிப் பெடைபுறந் தரூஉம்

அலவன் றன்னையு மென்னையு நோக்கி நொந்தனன் பெயர்ந்த துறைவன் வந்திலன் மாதோ வருந்துமென் மனனே

திருக்கோவையார் 84.

பாண்டிக்கோவை 110.

1.

3.

பொருளியல் 49.

கன்னிக். 2. அறிவழிய.

281 முதல் 285 முடியவுள்ள மேற்கோள் பாடல்களும், மெலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தல் கிளவி விளக்கமும் புதிதாக இணைக்கப் பெற்றன.