உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

இளங்குமரனார் தமிழ்வளம்

11

29. மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தல் என்பது ஒரு பெரியோன் தன்குறை இன்னதென்று வெளிப்படச் சொல்லு வதுஞ் செய்கின்றிலன். இஃதென்ன மாயங்கொல்லோ; அறி கின்றிலேன் எனத் தோழி அதற்கு நொந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(282) "நண்ணிய போர்மன்னர் வான்புக

நட்டாற் றமர்விளைத்த

மண்ணிவர் செங்கோல் வரோதயன்

வையைநன் னாடனையாய் கண்ணியன் தண்ணந் தழையன்

கழலன் கடுஞ்சிலையன்

எண்ணிய தியாதுகொல் லோவக லானிவ் விரும்புனமே

(283) “வளையணி முன்கை வாலெயிற் றமர்நகை யிளைய ராடுந் தளையவிழ் கானற் 'குறுந்துறை வினவி நின்ற

3

4நெடுந்தோ எண்ணற் கண்டிகும் யாமே"

(284) “பருவர னெஞ்சம் மேவல் தவிராது

செருவேல் உதியன் சேண்விளங்கு முசிறிக் கருங்கழி காவியொடு கலாஅங் கருதிய பெருங்கண் மாயோளே நாங்கடி கொண்ட செந்தினை கவர்ந்த பைங்கண் வேழங் கருவரைப் பிரசங் கையின் வாங்கி

ஈயினம் இரிய வீசி

வயவுப் பிடியின் வாயுறக் கொடுத்த

செவ்வி நோக்கி

உருகு நெஞ்சமொடு நீடுநினைந்

தருகுசென் ஞமலியும் என்னையு நோக்கிக்

I

பாண்டிக்கோவை 104.

ஐங்குறுநூறு 198.

1. றின்னகை. 2. விருந்தென. 3. நெடுந்தே ரண்ணல்.