உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

இளங்குமரனார் தமிழ்வளம் 11

ராரணங்கே யிங்கேநில் அங்கே வரின்மன்னுஞ் சூரணங்கே செய்யுந் தொடர்ந்து”

கிளவித் தெளிவு.

36. எதிர்ப்படுதல் என்பது தலைமகளைப் பகற்குறியிடத்து நிறுத்தித் தோழி நீங்கத் தமியளாய் நின்ற தலைமகளைத் தலைமகன் எதிர்ப்படுதல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(316) “படமா சுணப்பள்ளி யிக்குவ

'டாக்கிய பங்கயக்கண்

நெடுமா லெனவென்னை நீநினைந் தோநெஞ்சத் தாமரையே

யிடமா யிருக்கலுற் றோதில்லை நின்றவ னீர்ங்கயிலை

வடமார் முலைமட வாய்வந்து வைகிற்றிவ் வார்பொழிற்கே”

- திருக்கோவையார் 120.

(317) “பங்கய நாண்மலர் தான்வறி தாகப் படித்தலமே லிங்கிரு பாதங்க ணோவ நடந்துவந் திப்பொழில்வாய்த் தங்கிய காரண மென்னீ நினைந்து தடவரைவாய்ச் செங்கயல் தாம்வைத்த தென்னவ னாட்டன்ன சேயிழையே

(318) “நடந்த தெங்குநின் றெங்கின

நடப்பது நம்மையோ கமலத்து

மடந்தை யென்பது வந்தது

வரவொரு வாசகந் தந்தாலோ

பாண்டிக்கோவை 72.

கடந்த ருங்களிற் றண்ணல்சீ

வலவன் களவழி நன்னாட்டில்

தொடர்ந்து வண்டினம் பின்வர

முன்வரும் துடியிடை மடவீரே”

_

பழம்பாட்டு.

37. கோலஞ்செய்து உரைத்தல் என்பது எதிர்ப்பட்டுப் புணர்ந்த தலைமகன் தலைமகளைக் குழலுங் கோதையுந் திருத்த ஆற்றாளாகிய தலைமகட்குத் தலைவன் உரைத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு :

1. டாக்கியப்