உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

வலஞ்சுரித் தோகை ஞாளி 'மகிழும்

2

அரவவாய் ஞமலி குரையாது கடியிற் பகலுரு வுறழு நிலவுகான்று விசும்பி னகல்வாய் மண்டில நின்றுவிரி யும்மே திங்கள் கல்சேர்பு கனையிருள் 3மறையி னில்லெலி வல்சி வல்வாய்க் கூகை கழுதுவழங் கியாமத் தழிதகக் குழறும் வளைக்கட் சேவல் வளர்துயின் மடியின் மனைச்செறி கோழி மாண்குர லியம்பும் எல்லா மடிந்த காலை யொருநாள் நில்லா நெஞ்சத் தவர்வா ரலரே அதனால்,

அரிபெய் புட்டி லார்ப்பப் பரிசிறந் தாதி போகிய பாய்பரி நன்மான் நொச்சி வேலித் தித்த னுறந்தைக் கன்முதிர் புறங்காட் டன்ன

பன்முட் டின்றாற் றோழிநங் களவே"

(430) “யாயே துயின்மறந் தனளே யாயினு நாயு மூரு நனிதுஞ் சலவே

4காவல ரதனினுந் துயிலார் துயிலினு மாய்கதிர் மதியநின் றலரும்

யாவ தாங்கொல் ஏந்திழை நினைவே"

(431) “ஊர்துயிலின் நாய்துயிலா வொண்டொடி யூர்காக்கும்

பேர்துயிலு மாறொருகாற் பெற்றாலும்-நேர்துயிலாள்

அன்னை நெடுநிலா அல்லும் பகலாகும் என்னை வருவதுநீ இங்கு”

133

நெடுங்தொகை 121.

- பொருளியல் 79.

கிளவித்தெளிவு.

66. ஆறு பார்த்துற்ற அச்சக் கிளவி என்பது தலைமகன் வரும் வழியினுள்ள அச்சத்தைச் சொல்லி வரவு விலக்குதல். அதற்குச் செய்யுள் வருமாறு :

1. மருளும். 2. மகிழாது மடியின். 3. மடியி. 4. காவ லாள ரதனினுந் துயிலார்.