உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

155

49. வரைவார் முரசுக் கிரங்கல்

மணமுர சம்வினாவென் றுரையார் கிளவிகள் ஈரஞ்சொ டொன்பது மோங்குந்திரைக் கரையார் கருங்கடல் சூழல

கத்திற் கலைத்தமிழோர் விரையார் குழலாய் வெளிப்படை

யென்று விளம்பினரே.

இச்சூத்திரம் நான்கும் என்னுதலிற்றோவெனின் முன் சொன்ன வெளிப்படை நிலை பத்தொன்பது வகைப்பட்ட கிளவியாம் என்றார். அவை யறிவித்தலைக் கருதிற்று.

என்னை? (1) பூத்தரு புணர்ச்சியும், (2) புனறரு புணர்ச்சியும், (3) களிறு தரு புணர்ச்சியும், (4) கட்டுவிக் கேட்டலும், (5) கட்டுவி கூறலும், (6) வெறியெடுத்தலும், (7) வெறியினுக் கழிதலும், (8) அறிவுறக் கிளத்தலும், (9) தலைமகள் தோழிக் கறத்தொடு நிற்றலும், (10) வெறிவிலக்கலும், (11) முருகற் குரைத்தலும், (12) செவிலி நற்றாய்க் கறத்தொடு நிற்றலும், (13) நற்றாய் தன் ஐயன்மார்க் கறத்தொடு நிற்றலும். (14) வரைவு மறுத்தலும், (15) பரிசமொடு வருதலும், (16) வரைவு மலிவுரைத்தலும், (17) வரைவுடன் படுத்தலும், (18) முரசினுக்கிரங்கலும், (19) முரசு வினாதலும் எனப்படும் என்றவாறு.

வெளிப்படை எனினும், அறத்தொடு நிலை எனினும்

அமையும்.

1. அவற்றுள், பூத்தரு புணர்ச்சி என்பது என்மகட்க இவ் வேறுபாடு எற்றினான் ஆயிற்று என்ற செவிலிக்கு அறத்தொடு சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு :

(504) "ஆளரிக் கும்மரி தாய்த்தில்லை

யாவருக் கும்மெளிதாந்

தாளரிக் குன்றிற்றன் பாவைக்கு

மேவித் தழல்திகழ்வேற்

கோளரிக் குந்நிக ரன்னா

ரொருவர் குருமலர்த்தார்

வாளரிக் கண்ணிகொண் டாள்வண்ட

லாயத்தெம் வாணுதலே”

-திருக்கோவையார் 225.