உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

159

6. வெறியெடுத்தல் என்பது கட்டுவிக் கேட்ட செவிலித் தாய் வெறியெடுப்பித்தல். அதற்குச் செய்யுள் வருமாறு : (516) “வேலன் புகுந்து வெறியா டுகவெண் மறியறுக்க

காலன் புகுந்தவி யக்கழல் வைத்தெழிற் றில்லைநின்ற மேலன் புகுந்தென்க ணின்றான் இருந்தவெண் காடனைய பாலன் புகுந்திப் பரிசினி னிற்பித்த பண்பினுக்கே”

-திருக்கோவையார் 286.

(517) “வெறியா டுகதிறல் வேலன் புகுந்து வியந்துவெள்ளை மறியே யறுக்க மலர்ப்பலி தூவுக வண்டமிழ்நூல் குறிவா னிகந்தசெங் கோலரி கேசரி கூடலன்ன சிறியா ளிவடன்னை யிப்படி யாக்கிய தீங்கினுக்கே”

-பாண்டிக்கோவை 154.

(518) “மறியறுத்த செங்குருதி தன்னால் மனைமுன் வெறியெடுக்க வெண்பலிதூய் வேலன்-வெறியறுத்த மான்கொண்ட கண்ணி மதிகொண்ட வாணுதலாள் தான்கொண்ட விந்நோய் தனக்கு”

-பழம்பாட்டு.

7. வெறியினுக்கு அழிதல் என்பது செவிலித்தாய் வெறியெடுப்பக் கண்டு ஆற்றாமல் தன்னுள்) தலைமகள் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(519) "அயர்ந்தும் வெறிமறி யாவி

செகுத்தும் விளர்ப்பயலார்

பெயர்ந்து மொழியா விடினென்னை பேசுவ பேர்ந்திருவர்

உயர்ந்தும் பணிந்தும் உணரான

தம்பலம் உன்னலரிற்

றுயர்ந்தும் பிறிதி னொழியினென்

னாதுந் துறைவனுக்கே

(520) 1“வீயா மரபின் ஒருதிறம் நாடி ஆவயி னுரைப்பின் எவனோ தோழி

-திருக்கோவையார் 287.

1.

மு. ப:

---

.கந்தன்றே.

பொருளியல்.