உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆராய்ச்சி முன்னுரை

நூற்பெயர்

களவு என்பது பலபொருள் ஒருசொல். அச்சொல் ஈண்டுக் களவு, கற்பு என்னும் கைகோள் இரண்டனுள் களவினைக் குறிப்பதாம். கைகோள் எனினும் ஒழுக்கம் எனினும் ஒக்கும்.

உலகியலில் பொதுவாகக் கடிந்து கூறப்பெறுவது களவு. அது பொருட் களவாம். “உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்” என்று நெஞ்சத்தால் நினைத்தலும் களவே என்று கூறிக் களவின் சிறுமையை வெளிப்படுத்துகிறது அறநூல் அக்களவு அவ்வாறாக இக்களவு எத்தகைத்தோ எனின் இறையனார் களவியல் சீரிய விளக்கம் தருகின்றது :

"களவு கொலை காமம் இணைவிழைச்சு என்பனவன்றோ சமயத்தாரானும் உலகத்தாரானும் கடியப்பட்டன. அவற்றுள் ஒன்றன்றாலோ இதுவெனின் அற்றன்று. துவெனின் அற்றன்று. களவு என்னுஞ் சொற்கேட்டுக் களவு தீதென்பதூஉம், காமம் என்னுஞ் சொற் கேட்டுக் காமம் தீதென்பதூஉம், அன்று. மற்று அவை நல்ல ஆமாறும் உண்டு. என்னை, ஒரு பெண்டாட்டி தமரொடு கலாய்த்து நஞ்சுண்டு சாவல் என்னும் உள்ளத்தளாய் நஞ்சு கூட்டி வைத்து, விலக்குவாரை இல்லாத போழ்து உண்பல் என்று நின்றவிடத்து, அருளுடையான் ஒருவன் அதனைக் கண்டு, இவள் இதனை தனை உண்டு சாவா மற் காண்டு போய் உகுப்பல் என்று, அவளைக் காணாமே கொண்டுபோய் உகுத்திட்டான்; அவளும் சனநீக்கத்துக்கண் நஞ்சுண்டு சாவான் சென்றாள்; அது காணாளாய்ச் சாக்காடு நீங்கினாள். அவன் அக்களவினான் அவளை உய்யக் கொண்டமையின் நல்லூழிற் செல்லும் என்பது. மற்றும் இதுபோல்வன களவாகா; நன்மை பயக்கும் என்பது.

இனிக் காமம் நன்றாமாறும் உண்டு. சுவர்க்கத்தின்கண் சென்று போகந் துய்ப்பல் என்றும் உத்தர குருவின்கண் சென்று போகந் துய்ப்பல் என்றும் நன்ஞானங் கற்று வீடுபெறுவல் என்றும் தெய்வத்தை வழிபடுவல் என்றும் எழுந்த காமம்