உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

இளங்குமரனார் தமிழ்வளம் - 11

கண்டாயன்றே! மேன்மக்களாலும் புகழ்ப்பட்டு மறுமைக்கும் உறுதி பயக்கும் ஆதலின், இக்காமம் பெரிதும் உறுதியுடைத்து என்பது.”

இனி, உரையாசிரியர் இளம்பூரணவடிகள் தொல்காப்பியக் களவியல் உரைக்கண் “இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின் களவியல் என்னும் பெயர்த்து. களவொழுக்கம் உணர்த்தினமையாற் பெற்ற பெயர். அஃதாதல் ஈண்டு உரைக்கின்றதனால் பயனின்றாம்; களவென்பது அறம் அன்மையின் எனில், அற்றன்று; களவு என்னும் சொற் கண்டுழியெல்லாம் அறப்பாற்படாது என்றல் அமையாது. களவாவது, பிறர்க்குரிய பொருள் மறையிற் கோடல். இன்னதன்றி ஒத்தார்க்கும் மிக்கார்க்கும் பொதுவாகிய கன்னியரைத் தமர் கொடுப்பக் கொள்ளாது கன்னியர் தம் இச்சையினால் தமரை மறைத்துப் புணர்ந்து பின்னும் அறநிலை வழாமல் நிற்றலால் இஃது அறமெனப்படும்." என்று கூறுவதும், ஆசிரியர் நச்சினார்க்கினியர் அதே களவியல் உரைக்கண் "இவ்வோத்துக் களவு கற்பு என்னும் கைகோள் இரண்டனுள் களவு உணர்த்தினமையிற் களவியல் என்னும் பெயர்த்தாயிற்று; பிறர்க்குரித்தென்று இருமுது குரவரால் கொடை எதிர்ந்த தலைவியை அவர் கொடுப்பக் கொள்ளாது, இருவருங் கரந்த உள்ளத்தொடு எதிர்ப்பட்டுப் புணர்ந்த களவதலின் இது பிறர்க்குரிய பொருளை மறையிற் கொள்ளுங் களவன்றாயிற்று. இது வேதத்தை ‘மறை நூல்' என்றாற் போலக் கொள்க” என்று கூறுவதும் இக்கருத்தை வலியுறுத்துவனவாம்.

இம்மை இன்பங்காட்டி மறுமை இன்பங் கூட்டுவதாக வஞ்சித்துச் செல்வது கொண்டு களவியலாயிற்று என்று இறையனார் களவியல் உரையாசிரியர் காரணங் காட்டி

விளக்குகின்றார் :

66

கடுத் தின்னாதானைக் கட்டிபூசிக் கடுத்தீற்றியவாறு போலவும், கலங்கற் சின்னீர் தெருளாமையான் உண்பானை அறிவுடையான் ஒருவன் பேய்த்தேரைக் காட்டி ‘உதுக்காணாய், நல்லாதொரு நீர் தோன்றுகின்றது, அந்நீர் பருகாய், இச்சேற்று நீர் பருகி என் செய்தி' என்று கொண்டு போய் நன்னீர் காட்டி ஊட்டியது போலவும் தான் ஒழுகா நின்றதோர் இணை விழைச்சிணுள்ளே மிக்கதோர் ஒழுக்கங் காட்டினான். காட்டவே கண்டு, இது பெறுமாறு என்னை கொல்லோ?' என்னும்; எனவே, மக்கள் பாட்டினானும் வலியானும் வனப்பானும் பொருளானும் பெறலாவது அன்று ; தவஞ்செய்தால் பெறல் ;

ஆம்.