உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னை,

களவியற் காரிகை

"வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவம்

ஈண்டு முயலப் படும்’

3

என்பதாகலான் என்பது. அதுகேட்டு, இனி யானுந் தவஞ் செய்து இதனைப் பெறுவல் என்று அதன்மாட்டு வேட்கையால் தவஞ்செய்யும் ; செய்யா நின்றானைப், ‘பாவீ, இதன் பரத்ததோ வீடுபேற்றின்பம்?” என்று வீடுபேற்றின்பத்தை விரித்துரைக்கும். அதுதான் பிறப்புப் பிணி மூப்புச் சாக்காட்டு அவலக் கவலைக் கையாற்றின் நீக்கி மணியினது ஒளியும், மலரினது நாற்றமும், சந்தனத்தது தட்பமும் போல உள்நின்று எழுதரும் ஒரு பேரின்ப வெள்ளத்தது என்பது கேட்டு அதனை விட்டு வீடுபேற்றின் கண்ணே அவாவி நின்று, தவமும் ஞானமும் புரிந்து வீடு பெறுவானாம் என்பது. அவனை வஞ்சித்துக்கொண்டு சென்று நன்னெறிக்கண் நிறீஇனமையின் களவியல் என்னுங் குறி பெற்றது.

இக்களவின் இலக்கணத்தை “ஒன்றே வேறே என்றிருபால் வயின், ஒன்றி உயர்ந்த பால தாணையின், ஒத்த கிழவனும் கிழத்தியும்” கண்டு கூடும் கூட்டமென்று ஆசிரியர் தொல் காப்பியனார் கூறுவர். இக்கருத்தைக் “களவாவது பிணி, மூப்பு, இறப்புக்களின்றி எஞ்ஞான்றும் ஒருதன்மையராய் உருவும், திருவும், பருவமும், குலனும், குணனும் அன்பும், முதலியவற்றால் தம்முள் ஒப்புமையுடையராய தலைமகனும் தலைமகளும் பிறர் கொடுப்பவும் அடுப்பவுமின்றிப் பால் வகையால் தாமே எதிர்ப்பட்டுப் புணர்ந்து வருவது” எனப் பரிமேலழகர் திருக்குறள் களவியலில் விரித்தெழுதுகின்றார். பாலது ஆணையால் (ஊழால்) இஃதியல்வதாகலின் தெய்வப் புணர்ச்சி, இயற்கைப் புணர்ச்சி முதலிய குறியீடுகளையும் களவுப் புணர்ச்சி பெறுவ தாயிற்று. ஆதலால், பழிப்புக் குரியதொன்றன்று இஃது என்பது போதரும்.

களவொழுக்கம் பற்றிக் கூறும் நூல் களவியல் ஆகும். றையனார் அகப்பொருளுக்குக் களவியல் என்றும், இறையனார் களவியல் என்றும் பெயருண்மை அறிந்ததே. இனி, ஒரு நூலில் களவியல் இலக்கணம் கூறும் ஒரு பகுதியும் களவியல் எனப்பெயர் பெறும் என்பது தொல்காப்பியக் களவியலாலும், நம்பியகப்பொருட் களவியலாலும் தெளிவாம். களவொழுக்கத்திற்கு இலக்கியமாக அமைந்த ஓரிலக்கியப் பகுதியும் ‘களவியல்' என்று பெயர் பெறுவது திருக்குறட் களவியலால் விளங்கும். இவ் விடங்களில் எல்லாம் 'இயல்' என்பது நூலின் உட்பிரிவாகிய 'ஓத்து' என்னும் பொருளதாம். இதன் இலக்கணம்,