உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

இளங்குமரனார் தமிழ்வளம்

11

“நேரின மணியை நிரல்பட வைத்தாங்கு

ஓரினப் பொருளை ஒருவழி வைப்பது ஓத்தென மொழிப உயர்மொழிப் புலவர்”

என்னுந் தொல்காப்பிய நூற்பாவான் அறியக் கிடக்கிறது.

களவியல் என்னும் பெயரே சாலுமாகவும் களவியற் காரிகை எனல் வேண்டுமோ எனின் வேண்டும் என்பதாம். இந் நூற்கு முன்னூலான இறையனார் அகப்பொருள் ‘களவியல்’ எனப் பெயர் பெறும் ஆதலால், அப்பெயரையே அதன் பின்வரு நூற்குச் சூட்டுதல் மயக்கத்திற்கு இடனாம். ஆதலால், தெளிவு கருதிக் ‘களவியற் காரிகை' எனல் வேண்டும் என்பது.

இனிக் காரிகை என்பதன் பொருள் யாதோ எனின் கூறுதும்: களவு போலவே காரிகை என்பதும் பலபொருள் ஒரு சொல்லாம். அவற்றுள் அழகு, பெண், கட்டளைக் கலித்துறை என்னும் மூன்று பொருள்கள் குறிப்பிடத் தக்கனவாம். இம்முப் பொருளும் ஒருங்கமையச் செய்யப் பெற்றது களவியற் காரிகை. திட்டமிட்ட அழகிய பகுப்பும், அந்தாதி அமைப்பும் உடையது 1பெண்ணை முன்னிலைப்படுத்துக் கூறுவது; கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந்தது. மகடூஉ முன்னிலை யுடையதும், கட்டளைக் கலித்துறையால் அமைந்ததும் ஆகிய யாப்பிலக்கண நூல் யாப்பருங்கலக் காரிகை எனப் பெயர் பெற்றது போல இது ‘களவியற் காரிகை' எனப் பெயர் பெற்றது. 'காரிகை' என்பதே அமையாதோ எனின், அப்பெயரைக் கூறியவாற்றால் கொள்ளப் பெறுவது 2யாப்பருங்கலக்

காரிகையே ஆதலால், இப் பெயர் வேண்டும் என்பது.

2.

1. மதிநுதல் வேய்த்தோட் சிறு கோங் கரும்பாமென் முலைப்பூண் துடியிடையே (24) அஞ்சனந்தோய் கயற்கண்களால் மதன் சக்கரங்காக்கும் கதிர்முகத்தாய் (29) குடங்கை வென்ற விழியாய் (31) புடை வளரும் குவிமுலையாய் (45) விரையார் குழலாய் (49) குளங் கொண்ட நன்மொழிக் கொம்பே (50) துடியிடையே (52). “கந்த மடிவில்... தாழ்குழலே " என்பது காரிகை...... ...காரிகை யாப்பிற்றாய்............ “எனவும்” இந்நூல் யாவராற் செய்யப்பட்டதோவெனின் ஆரியம் என்னும் பாரிரும் பௌவத்தைக் காரிகை யாக்கித் தமிழ்ப்படுத்திய அருந்தவத்துப் பெருந்தன்மை அமிதசாகரர் என்னும் ஆசிரியராற் செய்யப்பட்டது” எனவும் குணசாகரர் எனவும் குணசாகரர் கூறுவதாலும் (யா.கா. 1) இக் காரிகை இயற்றியதற்குப் புலவர் முற்றூட்டாகக் காரிகைக் குளத்தூர் என்று பெயரிட்டு ஒரூரையே வழங்கியதாகக் கல்வெட்டால் அறியப் பெறுதலாலும் காரிகை என்பது கட்டளைக் கலித்துறையையும், யாப்பிலக்கணம் கூறும் இவ்வொரு நூலையும் குறித்தல் புலப்படும். வீரசோழியம் காரிகை யாப்பில் அமைந்ததாயினும் ‘காரிகை' என்ற அளவில் அதனைச் சுட்டாமல் வீரசோழியக் காரிகை என்றே கூறவேண்டி யுள்ளமையும் கருதத்தக்கது.