உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

LO

5

களவியற் காரிகை என்னும் நூற்பெயர்த் தகவினை அறிந்தோம். ஆயின், களவியலும், கற்பியலும் கூறும் நூற்குக் களவியல் எனக் குறியிட்டது தகுமோ எனின் தகும் என்பதாம். அது மிகுதியால் பெற்ற பெயராம். "முதனூல் கருத்தன்” எனத் தொடங்கும் நூற்பாவின் (நன். 49) உரைக்கண் மிகுதியால் பெயர் பெற்றது களவியல் என்று உரைகாரர் பலரும் உரைத்தமை அறியத் தக்கது. அறம் பொருள் இன்பம் என்னும் முப்பாலும் மொழியும் முப்பால், ‘அறம்' என ஆன்றோரால் வழங்கப் பெறுவதாலும், பிற மரங்களும் உளவேனும் புளியந்தோப்பு, மாந்தோப்பு என்று கூறும் வழக்குண்மையாலும் தெளிக.

முற்பகுதியும் பிற்பகுதியும் இடைப் பகுதி சிலவும் சிதைந்து போன இந் நூற் பெயர் தானும் அறியக் கூடாது ஒழிந்தது. நூலாசிரியர் பெயரும் உரையாசிரியர் பெயரும் அறியக் கூடவில்லை. தொன்னூல் நிலையத்தில் இருந்த ஒரோவோர் கையெழுத்துப் படியைக் கொண்டு அரிதின் முயன்று முதற் பதிப்பை வெயியிட்ட பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்கள் சூட்டிய பெயரே ‘களவியற் காரிகை' என்பதாம்.

66

இவ்வரிய நூலுக்கு இப்போது கிடைத்துள்ளது ஒரு கையெழுத்துப் பிரதியேயாகும். இது சென்னை அரசாங்கத் தாரது தொன்னூல் நிலையத்திலுள்ளது. இப் பிரதியின் றுதியில் எழுதப் பெற்றுள்ள ஆங்கிலக் குறிப்பினால் இஃது ஆழ்வார் திருநகரி மலையப்ப பிள்ளைக் கவிராயருக்குரிய ஏட்டுப் பிரதியினின்றும் நாதமுனிப் பிள்ளை என்பார் 12-6-1920 இல் பிரதி செய்ததென அறியக்கிடக்கின்றது. இப் பிரதி குறைப் ப் பிரதியே; இதன்கண் நூலின் முதலும் இறுதியும் காணப்பட ல்லை. அன்றியும், வாசிப்போர் பயனடையக்கூடாத வண்ணம் பிழை பொதிந்தும் இதழ்கள் முறை பிறழ்ந்தும் பலவாறாகக் கேடுற்றிருக்கின்றது. இடையிடையே செய்யுள்களும் வாக்கியத் தொடர்களும் மறைந்து போய்விட்டன. எனவே, எத்துணை முயன்றாலும் முழுவதும் இதனைச் செப்பஞ் செய்தல் இயலாத தொன்றாம். ஆயினும், கிடைத்த அளவில் தானும் இந்நூற் பகுதி மிகவும் பயன்படக்கூடியதாய் இருத்தலின் ஒருவாறு செப்பஞ் செய்து இப்போது வெளியிடப் பெறுகின்றது...

யாப்பருங்கலக் காரிகை யாப்புக்குரிய செய்திகளை யெல்லாம் கலித்துறைச் செய்யுளால் விளக்குவது போல இந்நூல் அகப்பொருட் செய்திகளை அந்தாதிச் தொடையில் அமைந்த கலித்துறைச் செய்யுள்களால் சுருங்க உரைக்கின்றது. இதன் உரை மிகவும் பாராட்டற்பாலது. இறையனார் களவியற்