உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

இளங்குமரனார் தமிழ்வளம்

11

சூத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு பரந்துபட்ட அகப்பொருட் செய்திகட்கெல்லாம் அரிய மேற்கோள்கள் காட்டி விரிந்து செல்கின்றது. தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் தவிரப் பிற நூல்களில் இருந்து மேற்கோள் தருமிடங்களில் அந் நூல்களின் பெயர்களையும் இவ்வுரை சுட்டி உணர்த்துகின்றது.

இந் நூலின் பெயர் புலப்படவில்லை. தொன்னூல் நிலையக் கையெழுத்துப் பிரதியில், 'இறையனாரகப் பொருட்டுறை: சங்கச் செய்யுளாக உதாரணமெழுதியது' எனக் காணப்படுகின்றது. து நூல் இன்னதென உணர்வதற்கு அதன் புறத்தே எழுதி வைக்கும் தலைக்குறிப்பு எனவே கொள்ளற்பாலது. நூற் பெயரன்று என்பது திண்ணம். இப்போது கொடுக்கப் பெற்றுள்ள ‘களவியற் காரிகை' என்னும் பெயர் என்னாற் படைத்துக் கொள்ளப்பட்டதேயாகும்” என்னும் முன்னுரைப் பகுதியால் நூலின் சிறப்பும் அதன் சிதைபாடும் நூற் குறியீட்டமைதியும் விளங்கும்.

நூற் பொருள்

ள்

களவு கற்பு என்னும் அகப்பொருள் பகுதி இரண்டனுள் களவுப் பகுதியே அகப்பொருள் நூல்களில் விரிந்து கிடப்பது. அவ்வாறே களவியற் காரிகையிலும் களவுப் பகுதி விரிந்துளது எனலாம்.

புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்பன அன்பின் ஐந்திணை உரிப் பொருள்கள். இவற்றுள் களவியலில் புணர்தலும் புணர்தல் நிமித்தமுமே பெருவரவிற்று என்பது தெள்ளிதின் உணரக் கிடப்பதாம்.

களவிற் கூட்டம் முக்கட் கூட்டம் எனப் பெறும். முக்கட் கூட்ட மாவது இயற்கையால் கூடும் கூட்டம் (இயற்கைப் புணர்ச்சி), தோழனால் கூடும் கூட்டம், தோழியால் கூடும் கூட்டம் என்பன. இக் கூட்டங்களின் விளைவாகத் தோன்றுவதே கற்பொழுக்கம். அதனால்,

66

'முக்கட் கூட்டம் முதலா நான்கும்

தொக்கியல் ஒழுக்கம் கற்பெனத் தோன்றும்”

என்று ‘தமிழ்நெறி விளக்கம்' கூறிற்று.

(21)

நான்கும் தொக்கிய ஒழுக்கமாவது அறத்தொடு நிலை, உடன் செலவு, சேயிடைப் பிரிவு, ஆயிடைப் பிரிவு என்பன. இவை கற்பொழுக்கத்தின் கூறுகளாம். இவற்றுள சேயிடைப் பிரிவு என்பது சேய்மைக் கண்ணே பிரிந்து செல்லுதல். அவை