உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

7

கல்விப் பிரிபு, காத்தற் பிரிவு, பகைதணிவினைப் பிரிவு, உற்றுழிப் பிரிவு, பொருள்வயிற் பிரிவு என்னும் ஐந்துமாம்.

ஆயிடைப் பிரிவு என்பது தன் ஊரும் சேரியும் நகரும் இடமாகப் பிரிவது ; அது பரத்தையிற் பிரிவு என்னும் ஒன்றுமேயாம்.

66

அ+இடை=ஆயிடை. சுட்டு செய்யுட்கண் நீண்டு வருதலை, நீட வருதல் செய்யுளுள் உரித்தே -தொல். எழுத்து. 206. என்னும் இலக்கணத்தானும், “ஆயிடைத் தமிழ்கூறு நல்லுல கத்து” என்றும், “ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே” என்றும் வரும் எடுத்துச் காட்டுக்களானும் இனிதின் அறியலாம். ஆயிடை என்பது சேயி என்பது சேயிடைக்கு முரணாய் அண்மை சுட்டி

நின்றது.

களவிற் புணர்ச்சி கூட்டக் கூடுதல் இன்றித் தொடங்கும். அதனால், கூட்டக் கூடுதல் களவிற்கு இல்லை. ஆயின், அக்கூட்டம் யாங்ஙனம் நிகழ்ந்ததோ எனின்,

“அதுவே,

தானே அவளே தமியர் காணக்

காமப் புணர்ச்சி இருவயின் ஒத்தல்

இறையனார் களவியல். 2

என்னும் நெறியால் கூட்டம் நிகழ்ந்ததாம். அதனால் அன்றோ முக்கட் கூட்டத்துள் முதற் கூட்டத்தை 'இயற்கைப் புணர்ச்சி’ என்றும் ‘தெய்வப் புணர்ச்சி' என்றும் ஆன்றோர் கூறினார்.

தெய்வம் என்பது ஊழ். 'பால்வரை தெய்வம்' என்பதும் அது. தெய்வம், ஊழ் என்னும் பொருட்டாதலைத்,

“தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்’

என்னும் குறளானும் (615) அதற்குப் பரிமேலழகர் வரைந்த ரையானும் அறிக.

இயற்கைப் புணர்ச்சி இன்றித் தோழனிற் கூட்டமோ தோழியிற் கூட்டமோ நிகழா. களவியலில் தோழனின் பங்கு ஒரு சிறு பகுதியேயாம்; கற்பியலிலோ இதனினும் சுருங்கியதாம். ஆனால், தோழியின் பங்கு பெரும் பகுதியாம். பகற்குறி, இரவுக் குறி, உடன்போக்கு, வரைவு, இல்லறம் ஆகிய அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவள் பங்கே மிகுதி. அவள், வழி வழி உரிமையுடையளாகவும், செவிலியின் மகளாகவும், “உடன் பிறந்து உடன் வளர்ந்து, நீர் உடன் ஆடிச் சீர் உடன் பெருகி, ஓல் உடன் ஆட்டப் பால் உடன் உண்டு, பல் உடன் எழுந்து சொல் உடன் கற்றுப், பழமையும் பயிற்றியும், பண்பும் நண்பும்