உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

இளங்குமரனார் தமிழ்வளம்

11

விழுப்பமும் ஒழுக்கமும் உடையவள் ஆகவும் இருத்தலால் அவளுக்கு அத்துணைச் சிறப்புரிமை ம அகப்பொருளில் உண்டாயிற்றாம். அவள் அறிவுக் கூர்ப்பும் உரையாட்டுத் திறமும் செயற் சீர்மையும். அகப்பொருளுக்குப் பேரழகும் சுவையும் பெருவாழ்வும் ஊட்டுவனவாம்.

னி

இனி இக்களவியற் காரிகையின் முற்பகுதியில் பத்துக் காரிகைகள் இல்லை. 22ஆம் காரிகை வரையிலான பகுதியும் பெரிதும் சிதைந்துபட்டன. அதன்மேல் 36 முதல் 42 வரையிலான காரிகை சிதைந்து படினும் 54 ஆம் காரிகை வரையிலான உரைப்பகுதி பெரும்பாலும் உளது. இடையிடை சிற்சில ஏடுகளே சிதைந்தன. 54ஆம் காரிகைக்கு மேற்பட்டவை. அறவே அழிந்துபட்டன. ஆயினும், கிடைத்த அளவில்,

“பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய மாமலை பயந்த காமரு மணியும் தொடைபுணர்ந் தருவிலை நன்கலம்”

அமைந்தாற்போல அமைந்து பொலிவுடன் திகழ்கின்றது.

களவியற் காரிகையில் காட்டப் பெற்றுள்ள மேற்கோள் பாடல்கள் அரியன; சுவை மிக்கன; தமிழின் பரப்பைக் காட்டுவன. வரலாற்றுக்கு வளமாக உதவுவன. நாம் இழந்து விட்ட நற்றமிழ்ச் செல்வங்கள் இவையெனக் காட்டி நலிவும் ஊட்டுவன.

இறையனார் களவியல் உரையில் மிகுதியும் மேற்கோளாக ஆளப்பெற்றுள்ள கோவைப் பாடல்கள் பாண்டிக் கோவையைச் சேர்ந்தன என்பதை அறிவித்ததுடன், அந்நூலில் காணக் கிடைக்காத அரிய பல பாடல்களைத் தந்ததும் இக்களவியற் காரிகையேயாம். பாண்டிக்கோவைப் பதிப்பில் இன்னும் இடம் பெறாத சில பாடல்களும் இந்நூற்கண் உள சங்கத்தொகையில் காணாத சில பாடல்களையும் அத்தொகைப் பாடலாகக் காட்டியுள்ளது. இவற்றை ஆங்காங்குக் காட்டியுள்ளாம். பாண்டிக் கோவை போலவே அகத்திணை, அரையர்கோவை, இன்னிசை மாலை, கண்டனலங்காரம், கிளவித்தெளிவு, கிளவிமாலை, கிளவி விளக்கம், கோயிலந்தாதி, சிற்றெட்டகம், நறையூர் அந்தாதி, பல்சந்தமாலை, வங்கர் கோவை முதலிய நூல்களின் பெயர்களையும் சில பல பாடல்களையும் இலக்கிய உலகுக்கும் இலக்கிய வரலாற்று உலகுக்கும் வழங்கி,வரையாது வழங்கும் வள்ளலென' வாகை சூடி நிற்பது இக் களவியல் காரிகையாம்.