உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

9

பதிப்பு

இனி, இப்பதிப்பில் மேற்கொள்ளப் பெற்ற செப்பங்கள் சில குறிப்பிடத் தக்கன.

முதற்பதிப்பில் சிதைவுடன் காணப்பெற்ற பலமேற்கோள் பாடல்கள் பல்வேறு நூல்களின் துணையால் செப்பப்படுத்தவும் நிறைவு செய்யவும் பெற்றுள.

காரிகையிலும் உரைநடையிலும் எழுத்து, அசை, சீர், முதலியனவும் தொடர், கிளவி விளக்கம் முதலியனவும் விடு பெற்றுள்ள பகுதிகள் தக்க வண்ணம் தேர்ந்து புதிததாக அமைக்கப் பெற்றுள.

காரிகைக் கருத்தையும் கிளவிக் கருத்தையும் உட்கொண்டு களவியற் காரிகை உரையாசிரியர் நெறியில் உரிய இடங்களில் அவர் மேற்கொண்ட நூல்களின் இகவாமல் மேற்கோல் பாடல்கள் தேர்ந்து இணைக்கப் பெற்றள. இவ்வகையில் இணைக்கப் பெற்ற

1. களவியல்

16,

காரிகையில் சிதைந்துள்ள 17-ஆம் மேற்கோள் நூற்பாக்களும் விடுபெற்ற பகுதியும் வீரசோழிய உரையில் பின்வருமாறு அறியக் கிடக்கின்றன.

“குடவரைக் குறிஞ்சியும் குணகடல் நெய்தலும் கடவ தாகும் களவிற் குரித்தே”

"இரு திணைத் தொழிலும் இயன்று தம்முள் ஒரு திணைக் கோதல் ஒழிந்தன இயல்பே' "நன்னில மருதமும் தொன்னில முல்லையும் துன்னருங் கற்பொடு தோன்றும் தொடர்ந்தே “இடைநிலைப் பாலை இருபாற்கு முரித்தே

படர்கொடி முல்லையின் பாற்பாடு மியற்றே”

“ஒருவயிற் றணத்தலும் பொருள்வயின் பிரிதலும் எருதிய களவிற் குண்மையான

வீர சோ. 90-94 உரை.