உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

இளங்குமரனார் தமிழ்வளம் - 11

கிளவி விளக்கம் ஐம்பதும், மேற்கோட் பாடல்கள் நூற்று முப்பத்து நான்கும் ஆம். முதற் பதிப்பில் மேற்கோட் பாடல்கள் 416 இருந்தன. இப்பதிப்பில் 650 பாடல்கள் உள. இவற்றுள் “பொன்னும் மணியும்” என்னும் திருக்கோவைப் பாடல் (189) ஒன்றுமட்டும் உரையாசிரியரால் உரையாசிரியரால் இருமுறை எடுத்தாளப் பெற்றுளது.

பாடல், உரை ஆகியவற்றில் நிரப்பப் பெற்ற பகுதி பிறைக் குறிக்குள்ளும், கிளவி விளக்கம் மேற்கோள் பாடல் ஆகிய ணைப்புகள் இருதலைப் பகரக் குறிக்குள்ளும் அமைத்து ஆங்காங்குக் குறிப்பும் எழுதப் பெற்றுள.

புதிய திருத்தங்களோ, மாற்றங்களோ, பாடவேறு பாடுகளோ காட்டப்பெற்றுள்ள இடங்களில் எல்லாம், முதற் பதிப்பில் இருந்தது இன்னது என்பது அடிக்குறிப்பாக அவ்வப் பக்கத்தில் ‘மு.ப.' என்னுங் குறிப்புடன் காட்டப் பெற்றுள்ளது.

மேற்கோட் பாடல்கள் கிடைக்கும் அளவிலேனும் மூல நூல்களுடன் ஒப்பிட்டுப் பாடவேறுபாடும் காட்டப் பெற்றுள.

மேற்கோட் பாடல்கள் அனைத்திற்கும் வரன்முறையே எண்கள் தந்தும், அவற்றுக்குக் குறிப்புரை எழுதிப் பின்னிணைப் பாகச் சேர்த்தும் பதிப்பிக்கப் பெற்றுள்ளது.

இந் நூலின் முதற் பதிப்புக்குத் தம்மிடம் இருந்த ஒரோ ஒரு கையெழுத்துப் படியினை உதவிய தொன்னூல் நிலையத் தினர்க்கும், அதனை அரிதின் முயன்று பதிப்பித்து உதவிய அறிஞர் திரு. ச. வையாபுரிப் பிள்ளை, பி.ஏ., பி.எல்., அவர்கட்கும் நன்றியுடையேம்.

66

‘எத்துணை அரிய நூல்களை நாம் இழந்து விட்டோம் என்பதைக் கணக்கிடவும் முடியவில்லை.......எஞ்சி நிற்கும் நூல்களையேனும் போற்றி..தமிழ் மக்கள் என்னும் பெயர்க்குத் தகுதியுடையவராக நம்மைச் செய்து கொள்ளுதல் நமக்குரிய முதற் கடமையாகும்” என்று முதற் பதிப்பாசிரியர் கூறியதற்கு ஏற்பக் கையில் கிட்டிய அளவிலேனும் களிவயற் காரிகை அழிந்து படாது கன்னித் தமிழின் கவின் மிக்க அணிகலமாகத் திகழ்வதற்கு உறுதுணையும் தூண்டலுமாய் அமைந்து இவ்விரண்டாம் பதிப்பைக் கழக வழியாக வெளிக் கொணர்ந்த ஆட்சியாளர், தாமரைச் செல்வர் திருமிகு வ. சுப்பையா பிள்ளை அவர்களுக்கு உள்ளார்ந்த நன்றியுடையேம்.

அருளகம்,

24-4-73

தமிழ்த் தொண்டன்,

இரா. இளங்குமரன்