உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

1. 1அகப்பொருள்

(களவியற் காரிகையின் முதல்

இருபத்திரண்டு சூத்திரங்கள் (நூற்பாக்கள்) சிதைவுற்றுள்ளன. அவற்றுள் முதற் பன்னிரண்டு நூற்பாக்களில் முதல், கரு, உரிப்பொருள்கள் ஐந்து திணைகளுக்கும் கூறப்பெற்றிருந்தன என்பது இடையிடையே 2சிதைவுடன் கிடைத்துள்ள பகுதிகளால் புலப்படுகின்றது. அப் பகுதிகளையும் மேலுள்ள பிற பகுதிகளையும் நோக்குங்கால் களவியற் காரிகை இறையனார் அகப்பொருட் கருத்தையும், ரையையும் பெரிதும் தழுவிச் செல்லுதல் வெளிப்படுகின்றது. ஆதலால், இறையனார் அகப்பொருளில் உள்ளவாறு முதல் கரு உரிப் பொருள்கள் இம்முதற் பகுதியில் உரைக்கப் பெறுகின்றன. களவியற் காரிகையில் கிடைத்துள்ள பாலைத்திணைக் கருப்பொருளுடன், இறையனார் அகப்பொருள் உரைக்கும் பாலைக் கருப் பொருளை ஒப்பிட்டுக் கண்டு இவ்விணைப்பின் பொருத்தம் அறிக. 3அகப்பொருள் கற்பார்க்கு முதல் கரு உரிப் பொருள்கள் அறிதலின் இன்றியமையாமையையும் உணர்க.)

முதற் பொருள்

முதல் இரண்டு வகைப்படும், நிலமும் 4பொழுதும் என.

என்னை?

1.

2.

3.

களவியற் காரிகையால் மிகுதியும் பாராட்டப் பெறும் தமிழ்நெறி விளக்கப் பொருளியலில் முதல், கரு, உரிப் பொருள்களைக் கூறும் பகுதி அகப்பொருள் எனக் குறிக்கப் பெற்றுள்ளமையால் இப்பகுதிக்கு இப்பெயர் சூட்டப்பெற்றது.

சிதைவடைந்துள்ள பகுதிகளைப் பின்னிணைப்பிற் காண்க.

66

"முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே

நுவலுங் காலை முறைசிறந் தனவே

பாடலுட் பயின்றவை நாடுங் காலை

99

என்னும் நூற்பாவையும் அதன் உரையையும் காண்க.

4.

தொல். அகத்திணை. 3.

பொழுது இரண்டு வகைப்படும். அவை பெரும்பொழுதும் சிறுபொழுதும். பெரும்பொழுது எவை என்பதையும், அவற்றுக்குரிய மாதங்களையும் 14ஆம் மேற்கோள் நூற்பாவிற் காண்க.