உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

இளங்குமரனார் தமிழ்வளம் 11

(1) “முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின் இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே"

என்றாராகலின்.

- தொல். அகத்திணையியல் 4.

குறிஞ்சிக்கு நிலம், மலையும் மலைசார்ந்த இடமும், பொழுது, கூதிரும் யாமமும் முன்பனியும்.

நெய்தற்கு நிலம், கடலும் கடல் சார்ந்த இடமும், பொழுது, எற்பாடு.

6

பாலைக்கு நிலம் இல்லை.

(2) “நடுவண் ஐந்திணை நடுவண தொழியப்

படுதிரை வையம் பாத்திய பண்பே’

99

என்றார் தொல்காப்பியனார் ஆகலின்.

அகத்திணையியல் 2.

பொழுது, நண்பகலும், வேனிலும், பின்பனியும், நிலம் இன்றிப் பொழுதினானே திணையாமோ எனின், 2குறிஞ்சியும் முல்லையும் அடுத்த நிலமே காலம் பற்றிப் பாலை நிலமாம் என்பது.

முல்லைக்கு நிலம், காடும் காடு சார்ந்த இடமும். பொழுது, காரும் மாலையும்.

மருதத்திற்கு நிலம், பழனமும் பழனஞ் சார்ந்த இடமும். பொழுது, வைகறை யாமம்.

அஃது என்னை? பெறுமாறு எனின்,

(3) “மாயோன் மேய காடுறை யுலகமும்

சேயோன் மேய மைவரை யுலகமும்

வேந்தன் மேய தீம்புன லுலகமும் வருணன் மேய பெருமண லுலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்

சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே’

சிறுபொழுது மாலை, யாமம், வைகறை, விடியல், எற்பாடு, நண்பகல் என்பன. (தொல்.அகத்திணை. 6-9)

ஐவகைச் சிறுபொழுதென்பார் நாற்கவிராச நம்பி.

2.

“மாலை யாமம், வைகறை, எற்படு

காலை, வெங்கதிர் காயுநண் பகலெனக் கைவகைச் சிறுபொழு தைவகைத் தாகும்”

"முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப் பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்”

– நம்பியகப்பொருள் 12.

- சிலப்பதிகாரம் 11: 64-66.