உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

13

(4) "காரு மாலையு முல்லை"

(5) “குறிஞ்சி

கூதிர் யாமம் என்மனார் புலவர்

(6) “பனியெதிர் பருவமும் உரித்தென மொழிப” (7) “வைகுறு விடியல் மருதம்’

(8) “ஏற்பாடு

நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும்”

(9) “நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே’

(10) “பின்பனி தானும் உரித்தென மொழிப”

அகத்திணையியல் 5-12.

மருதத்திற்கும் நெய்தற்கும் பெரும்பொழுது சொல்லிற்றின் மையின் அறுவகை 'இருதுவும் உரிய எனக் கொள்க. இவை முதல்.

கரு

கருப் பொருள்

என்பது தெய்வமும் உணாவும் மாவும் மரமும் புள்ளும் பறையும் 2செய்தியும் யாழும் முதலாக உடையது.

என்னை?

(11) “தெய்வம் உணாவே மாமரம் புட்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவுங் கருவென மொழிப

அகத்திணையில் 20.

என்றாராகலின். அவை அம்முறையானே சொல்லுதும்.

1.

குறிஞ்சிக்குத், தெய்வம் முருகவேள்.

3

உணா ஐவன நெல்லும், தினையும்.

மா

-

புலியும், பன்றியும், யானையும்.

மரம் - அகிலும், 4ஆரமும், திமிசும், தேக்கும், வேங்கையும்.

இருது – இரண்டு திங்கள் கொண்ட ஒரு பருவம். “வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிவோர் இருதுவின் கண்ணுடைத் தென்மனார் புலவர்’

2.

செய்தி - தொழில்.

3.

ஐவன நெல் – மலைநெல்.

“ஐவனம் வித்தி மையுறக் கவினி’

4. ஆரம் – சந்தனம்.

66

“குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளி

ஆரம் ஆதலின் நறும்புகை யயலது”

- நம்பியகப் பொருள் 41.

-

· புறநானூறு 159.

- புறநானூறு 103.