உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

இளங்குமரனார் தமிழ்வளம்

11

(552) "வான்றோய் தொல்குடி மரபு 'மவ்வழிச்

2சான்றீ ருமது வரவு நோக்கி

நேர்ந்தன மல்லதிவ் வுலக

மூன்றுடன் பெறினும் முடிவதோ வன்றே

(553) “தூய நினதறிவுங் கல்வியுந் தொன்முனிவ ராய வவர்வரவு மன்றாயின்-மேயசீ ரோலார்பூ வட்ட முறையிடவும் போதாது வேலா முலைக்கு விலை”

-பொருளியல் 112.

-கிளவித்தெளிவு.

18. முரசினுக்கு இரங்கல் என்பது இவ்வகை சொல்லக் கேட்ட தலைமகன் வினைமுற்றி நிதியொடு நீணகர் புகுந்த பின்னர் முரசறைதல் கேட்ட தலைமகள் சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(554) “அடற்களி யாவர்க்கு மன்பர்க்

களிப்பவன் றுன்பவின்பம்

படக்களி யாவண் டறைபொழிற்

றில்லைப் பரமன்வெற்பிற்

கடக்களி யானை 3கடந்தவர்க்

கோவன்றி நின்றவர்க்கோ

விடக்களி யாகம் விழுநக

ரார்க்கும் வியன்முரசே”

(555) “செம்மையில் லாததெவ் வேந்தரைச்

1.

சேவூர்ச் செருக்கழித்த

வம்மிகு தானை யடலரி

கேசரி யம்பொதியில்

வெம்முக யானை கடிந்தவர்க்

கோவன்றி வேறெவர்க்கோ

நம்மலை வாசலில் நம்முர

சந்தான் நரலுவதே”

-திருக்கோவையார் 297.

-4பாண்டிக்கோவை (?)

மு.ப : மிவ்வழிச். 1. மு.ப : சான்றோர் தமது. 3. கடிந்தவர்க். 4. இப்பாடல்கள்

பாண்டிக்கோவைத் தொகுப்பில் இடம் பெற்றில.