உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை க

175

தணித்தலும், (21) வரவுமுந் துறுத்தலும், (22) கிளையது மகிழ்ச்சியும், (23) சேலனை வினாதலும், (24) ஈன்றாட் புகழ்தலும், (25) மணங்கண்டுரைத்தலும், (26) கற்பு நிலை விளம்பலும், (27) மகணிலை கூறலும் என.

1. அவற்றுட் கையடை என்பது உடன்போக விரைந்த பின்றைத் தலைமகளைக் காட்டிக் கொடுத்துத் தோழி தலை மகனுக்கு ஒம்படை சொல்லுதல். அதற்குச் செய்யுள் வருமாறு: (571) "பறந்திருந் தும்பர் பதைப்பப்

படரும் புரங்கரப்பச்

சிறந்தெரி யாடிதென் றில்லையன் னாடிறத் துச்சிலம்பா 'வறந்திரி தந்துன் னருளும்

வறிதாய் வருமறையின்

நிறந்திரிந் தார்கலி யும்முற்றும் வற்றுமிச் சேணிலத்தே

(572) “மென்முலை வீழினும் கூந்தல்

நரைப்பினும் விண்ணுரிஞ்சு

நன்மலை நாட விகழல்கண்

டாய்நறை ~யாற்றுவென்ற

வின்மலி தானை நெடுந்தேர்

விசாரிதன் வேந்தர்பெம்மான்

-திருக்கோவையார் 213.

கொன்மலி வேனெடுங் கண்ணிணைப்

பேதைக் கொடியினையே”

-பாண்டிக்கோவை 203.

2. 3சுரத்துய்த்தல்

செய்யுள் வருமாறு:

(573) “ஈண்டொல்லை ஆயமும் ஔவையும் நீங்கவிவ் வூர்க்கவ்வைதீர்த்

என்பது (தலைமகளை வழியில்

மெல்லெனத் தலைவன் கொண்டு

செல்லுதல். அதற்குச்

1. வறந்திருந் துன்னரு ளும்பிறி தாயி னருமறையின். 2. யாற்றில் வென்ற.

2.

சுரத்துய்த்தல் என்னும் கிளவி விளக்கமும் 573, 574 ஆம் மேற்கோள் பாடல்களும் ணைக்கப் பெற்றன.