உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

183

'நாலூர்க் கோசர் நன்மொழி போல

வாயா கின்றே தோழி ஆய்கழற்

சேயிலை வெள்வேல் விடலையொடு

தொகுவளை முன்கை மடந்தையொடு நட்பே”

-குறுந்தொகை 15.

9. நற்றாய் இரங்கல் என்பது செவிலி வழியாகத் தலைவி உடன் போக்கறிந்த நற்றாய் வருந்தி யுரைத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(601) “யாழியன் மென்மொழி வன்மனப்

பேதையோ ரேதிலன்பின்

தோழியை நீத்தென்னை முன்னே

துறந்துதுன் னார்கண்முன்னே

வாழியிம் மூதூர் மறுகச்சென்

றாளன்று மால்வணங்க ஆழிதந் தானம் பலம்பணி

யாரின் அருஞ்சுரமே’

99

(602) “தன்னம ராயமொடு நன்மண நுகர்ச்சியின் இனிதாங் கொல்லோ தனக்கே பனிவரை யினக்களிறு வழங்குஞ் சோலை வயக்குறு வெள்வே லவற்புணர்ந்து செலவே”

(603) "ஒருமக ளுடையேன் மன்னே யவளுஞ் செருமிகு மொய்ம்பிற் கூர்வேற் காளையொடு பெருமலை அருஞ்சுரம் நெருநற் சென்றனள் இனியே,

தாங்குநின் னவலம் என்றீர் அதுமற் றியாங்ஙன மொல்லுமோ அறிவுடை யீரே உள்ளின் உள்ளம் வேமே உண்கண் மணிவாழ் பாவை நடைகற் றன்னவென் அணியியற் குறுமகள் ஆடிய

மணியேர் நொச்சியுந் தெற்றியுங் கண்டே’

1. நல்லூர்க். 2. தொடுவளை முன்கைநம்.

-திருக்கோவையார் 230.

-ஐங்குறுநூறு 379.

– நற்றிணை 184.