உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

(614) “காய்ந்திலை மறவை மன்னோ வேந்திழை அழல்கெழு வெஞ்சுரஞ் செலவும்

எழில்கெழு பாவை ஏந்திய குரவே"

(615) “தான்றாயாக் கோங்கம் தளர்ந்து முலைகொடுப்ப வீன்றாய்நீ பாவை யிருங்குரவே-யீன்றாண்

மொழிகாட்டா யாயினு முள்ளெயிற்றாள் சென்ற வழிகாட்டாய் ஈதென்று வந்து”

187

பொருளியல் 123.

-திணைமாலை நூற்றைம்பது 65.

ம்

14. புறவொடுரைத்தல் என்பது தலைவியைத் தேடிச் செல்லும் செவிலி ஆங்குக் கண்ட புறாவினிடம் ஆற்றாமை உரைத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(616) “புயலன் றலர்சடை ஏற்றவன்

தில்லைப் பொருப்பரசி

பயலன் றனைப்பணி யாதவர்

போல்மிகு பாவஞ்செய்தேற்

கயலன் தமியன்அஞ் சொற்றுணை வெஞ்சுரம் மாதர்சென்றால் இயலன் றெனக்கிற் றிலைமற்று வாழி எழிற்புறவே"

-திருக்கோவையார் 240.

15. அடிச்சுவடு உரைத்தல் என்பது குரவையும், புறவையும் கண்டு வருந்திச் செல்லும் செவிலி தலைவியின் அடிச்சுவடு நிலத்திற் பதிந்திருக்கக் கண்டு வருந்திக் கூறுதல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(617) "தெள்வன் புனற்சென்னி யோன்அம்

பலஞ்சிந்தி யாரினஞ்சேர்

முள்வன் பரல்முரம் பத்தின்முன்

செய்வினை யேனெடுத்த

ஒள்வன் படைக்கண்ணி சீறடி

யிங்கிவை யுங்குவையக்

கள்வன் பகட்டுர வோனடி

யென்று கருதுவனே"