உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

இளங்குமரனார் தமிழ்வளம்

(648) 1“கானங் கோழிக் கவர்குரற் சேவல் ஒண்பொறி யெருத்திற் றண்சிதர் உறைப்பப் புதனீர் வாரும் பூநாறு புறவிற்

சீறூ ரோளே மடந்தை வேறூர் வேந்துவிடு தொழிலொடு செலினுஞ்

11

2சேந்துவர லறியாது செம்மல் தேரே'

-குறுந்தொகை 242.

27. மகள்நிலை கூறல் என்பது இருவர் கற்பு நிலையையுங் கூறிய செவிலி தலைமகள் வாழ்வுநிலையை உரைத்தல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(649) “தொண்டின மேவுஞ் சுடர்க்கழ

லோன்தில்லைத் தொன்னகரிற்

கண்டின மேவுமில் நீயவள்

நின்கொழு நன்செழுமென்

தண்டின மேவுதிண் தோளவன்

யானவள் தற்பணிவோள்

வண்டின மேவுங் குழலா

ளயல்மன்னும் இவ்வயலே”

(650) "முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்

கழுவுறு கலிங்கம் கழாஅ துடீஇக்

குவளை யுண்கண் குய்ப்புகை 3கமழத்

தான்துழந் தட்ட தீம்புளிப் பாகர்

இனிதெனக் கணவன் உண்டலின்

நுண்ணிதின் மகிழ்ந்தன் றெண்ணுதல் முகனே”

-திருக்கோவையார் 302.

-குறுந்தொகை 167.

4உடனிலைச் செலவு முடிந்தது (51-54)

1.

கானக். 2. சேர்ந்துவர. 3. கழுமத்.

4.

கற்பொழுககத்தின் பிரிவுகளாகிய அறத்தொடுநிலை, உடனிலைச் செலவு ஆகிய இரண்டற்கும் ஆசிரியர் வகுத்துள்ள கிளவிகள் இன்னவை என அறியக் கிடத்தலால் அவற்றுக்கு விளக்கமும் மேற்கோளும் இணைக்கப் பெற்றன. எஞ்சிய இடைப்பிரிவு ஆயிடைப் பிரிவுகட்கு வகுத்த கிளவிகள் அழிந்தமையான் கிளவி விளக்கமும் மேற்கோளும் இணைக்கப் பெற்றில.