உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

195

வில்லான் விசாரிதன் கூடல்

விழவினைப் போலுமில்லுள் நல்லார் மகிழ்வெய்த நாளை

மணஞ்செய்ய நல்குங்கொல்லோ கல்லார் திரள்தோள் விடலையை ஈன்ற கணங்குழையே”

(645) “நும்மனைச் சிலம்பு கழீஇ யயரினும்

எம்மனை வதுவை நன்மணங் 'கழிகெனச் சொல்லின் எவனோ மற்றே வென்வேல் மையற விளங்கிய கழலடிப்

பொய்வல் காளையை ஈன்ற தாய்க்கே”

-பாண்டிக்கோவை 229, 230.

-ஐங்குறுநூறு 399.

26. கற்புநிலை விளம்பல் என்பது தலைமகள் கடிமனை ன சென்று மீண்ட செவிலி அவர்கள் கற்பு நிலையை நற்றாய்க்குக் கூறுதல். அதற்குச் செய்யுள் வருமாறு:

(646) “தெய்வம் பணிகழ லோன்றில்லைச்

சிற்றம் பலமனையாள்

தெய்வம் பணிந்தறி யாளென்று

நின்று திறைவழங்காத் தெவ்வம் பணியச் சென்றாலுமன்

வந்தன்றிச் சேர்ந்தறியான்

பௌவம் பணிமணி யன்னார் பரிசின்ன பான்மைகளே’”

(647) “திருநெடுங் கோதையுந் தெய்வந்

தொழாள்தெவ்வர் மேற்செலினும்

பெருநெடுந் தோளண்ணல் பேர்த்தன்றித்

தங்கான் பிறழ்விற்செங்கோல்

அருநெடுந் தானை அரிகே

சரியந்தண் கூடலன்ன

கருநெடுங் கண்மட வாயன்ன

தாவலர் காதன்மையே”

-திருக்கோவையார் 304.

-பாண்டிக்கோவை 334.

1.

கழிக, என்று நாம் சொல்லின் எவனோ தோறி. 2. விளங்குங்.