உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*மேற்கோள் நூற்குறிப்பு

1. அகத்திணை

அகப்பொருள் பற்றிக் கூறும் நூல்களுள் இஃதொன்று. இதன் மூன்று பாடல்கள் களவியற் காரிகையில் மேற்கோளாக ஆளப்பெற்றுள. அவற்றுள் “நெடுவேல் துடக்கிய” என்னும் பாடல் (45) நம்பியகப் பொருளிலும் மேற்கோளாக ஆளப் பெற்றுள்ளது.

தொல்காப்பியத்தில் அகப்பொருள் பற்றிய பொது இலக்கணங்களைக் கூறும் அகத்திணை இயலுள்ளது. அவ்வகப் பொருளை விரித்தும் சுருக்கியும் செய்யப்பெற்ற நூல் அகத் திணைபோலும். ஒவ்வொரு பொருள் பற்றியும் தனித்தனி நூல் யாத்தல் வேண்டும் என்னும் காட்டத்தால் பல நூல்கள் தோன்றின. அவற்றுள் அகத்திணையும் ஒன்றாகலாம்.

களவியற் காரிகையால் அகத்திணையில் இருந்து அறிந்து கொண்ட பாடல்கள் மூன்றும் வெண்பாக்களாக இருத்தலால் வெண்பாவால் அமைந்த நூலாகலாம். அவ்வகையில் எழுந்த நூல் புறப்பொருள் வெண்பாமாலை யாதல் அறிக. இனி, அகத்திணை என்னும் இலக்கண நூலுக்கு மேற்கோளாக ஆளப்பெற்ற இலக்கிய வெண்பாக்களாகவும் இவை இருத்தல் கூடும்.

2. அரையர் கோவை

களவியற் காரிகையால் அறியப்பெறும் கோவை நூல்களுள் அரையர் கோவை என்பதுவும் ஒன்று. இக் கோவையில் இருந்து வரவுணர்ந்துரைத்தல் என்னும் கிளவிக்கு மேற்கோளாகக் கட்டளைக் கலித்துறைப் பாடல் ஒன்றைக் காட்டியுள்ளார்.

இப் பாடலில் தயாபரன் என்றோர் அரசன் குறிக்கப் பெறுகின்றான். அவனுக்குரியதாகத் தஞ்சை குறிக்கப் பெறுகின்றது. தஞ்சை வாணன் கோவையின் பாட்டுடைத் தலைவனாகிய * இக் குறிப்பில் மறைந்துபோன நூல்களைப் பற்றிய குறிப்புகளே இடம் பெற்றுள.