உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

215

வாணனின் பாண்டி நாட்டுத் தஞ்சாக்கூர் இப் பாடலால் குறிக்கப்பெறுகின்றதா? சோணாட்டுத் தஞ்சை குறிக்கப் பெறுகின்றதா? என்பது அறியக்கூடவில்லை.

அரையர் என்பது அரசர் என்பதாம். முத்தரையர் என்பார் வள்ளல்களாய்த் திகழ்ந்தனர் என்பதை நாலடியார் நவில் கின்றது. அரையர் என ஒரு குடியினர் இருந்தனர்போலும். அவருள் வந்து ஆட்சிபுரிந்து ஒருவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டெழுந்த நூல் அரையர் கோவை யாதல் வேண்டும்.

3. இன்னிசை மாலை

அகப்பொருள் பற்றி வெண்பா யாப்பில் அமைந்த ஒரு நூல் இவ்வின்னிசை மாலையாகும். குறிஞ்சி நாட்டு வேந்தன் ஒருவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுந்த நூல் து. இந் நூலில் இருந்து ‘கழறல்’, இடம் வினாதல்' என்னும் இரண்டு துறைகட்கும் இரண்டு வெண்பாக்கள் காட்டப் பெற்றுள. (76, 91) அவற்றுள் ரண்டாம் பாடல் சிதை வடைந்துள்ளது.

66

"இஃது இசைத்தமிழ் பற்றிய நூலோ என்ற ஐயம் உண்டாகும். ஆனால் இஃது இசைத்தமிழ் நூல் அன்று. அகப்பொருள் கூறும் நூல். இன்னிசை என்பதற்கு ஈண்டு இனிய புகழ் என்று பொருள் கொள்ள வேண்டும். கொடை, வீரம் முதலியவற்றில் இசைபெற்ற ஒருவன்மீது அகப்பொருள் துறைகள் அமையப் பாடப்பெற்ற நூல் இது என்பது தெரிகிறது. செட்டியார்களின் புகழைக் கூறும் நூல் ஒன்று இருந்தது. அதனை இயற்றியவர் செயங்கொண்டார் என்னும் புலவர். செட்டிமார்களின் புகழைக் கூறும் அந் நூலுக்கு இசையாயிரம் என்று பெயர் சூட்டப்பட்டது. அதுபோன்ற இன்னிசை மாலை என்னும் நூலும் ஒருவருடைய புகழைக் கூறுவதாக இருத்தல் வேண்டும்" என்று அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் கூறுகிறார்கள். (மறைந்துபோன தமிழ் நூல்கள்)

இனி, இன்னிசை என்பது வெண்பா யாப்பினுள் ஒன்று என்பது எவரும் அறிந்ததே. இன்னிசை வெண்பா யாப்பான் அமைந்த நூல் இன்னிசை மாலையெனப் பெயர் பெற்றது என்றுமாம்.

பெரும் புலவர் புலவர் அரசஞ் சண்முகனார் இன்னிசை வெண்பாவால் யாத்த ஒரு நூல் ‘இன்னிசை இருநூறு’ ஆகும். அவர் யாத்த மற்றொரு நூல் 'வள்ளுவர் நேரிசை' என்பதாகும்.,