உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

இளங்குமரனார் தமிழ்வளம்

11

அது நேரிசை வெண்பாவான் அமைந்தது. இவ்வாறே இன்னிசை வெண்பாவால் யாக்கப்பெற்ற நூலாக இருக்கக்கூடும் என்னும் எண்ணத்தைக் கிடைத்துள்ள இரண்டு வெண்பாக்களும் குறிப்பால் அறியச் செய்கின்றன.

4. ஐந்திணை

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலையாகிய ஐந்திணை ஒழுக்கத்தைப் பற்றிக் கூறும் ஒரு நூல் ஐந்திணை ஆகும்.

ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணை மாலை நூற்றைம்பது என்பன போன்றதொரு நூலாகலாம். இவ் வைந்திணை நூல்களைப் போலவே இந் நூலும் வெண்பாவான் இயன்றதென்பது கிடைத்துள்ள ஒரு பாடலும் வெண்பாவாக இருத்தல் கொண்டு அறியலாம்.

கிடைத்துள்ள வண்பா

கிளவிக்கு' எடுத்துக்காட்டாம்.

ஆறுபார்த்துற்ற அச்சக்

5. கண்டன் அலங்காரம்

கண்டனலங்காரம் என்னும் நூலில் இருந்து களவியற் காரிகையால் 12 பாடல்கள் அறியக் கிடக்கின்றன. அவை வெண்பா, கட்டளைக் கலித்துறை கலித்துறை ஆகிய பாவகையால்

அமைந்தவை.

அலங்காரம் என்னும் பெயர்கொண்டு, அணி இலக்கணம் கூறிய நூலோவென ஐயுறுதற்கு இல்லை. இதுவும் அகப் பொருள் பற்றிய தொரு நூலே. இதன் பாட்டுடைத் தலைவன் கண்டன் என்பது நூற் பெயராலும், பாடல்களாலும் நன்கனம் அறியக் கிடக்கின்றது.

இக்கண்டன் குடைவேந்தன் என்பதும் (102) கொல்லிக்கு உரியவன் என்பதும் (121) பகை வென்றவன் என்பதும் (129) வரைமேல் புலி பொறித்தான் புகார்க்கு உரியவன் என்பதும் (141, 206) அரசருள் சிறந்தோன் என்பதும் (167) புனல் நாடன் என்பதும் (309) தியாகக் கொடியுடையவன் என்பதும் (*336) சீரிய தார் அணிந்தவன் என்பதும் (480, 529) சனநாதன் என்னும் பட்டம் உடையவன் என்பதும் (362) இப்பாடல்களால் அறிய வருகின்றன.

ஆசிரியர் நச்சினார்க்கினியர் புறத்திணை இ யலில் (91)