உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

66

அறநீர்மை தாங்கி அளப்பரிதாய் வானப்

217

புறநீர்போன் முற்றும் பொதியும்-பிறரொவ்வா

மூவேந்த ருள்ளும் முதல்வேந்தன் முத்தமிழ்க்குக் கோவேந்தன் கண்டன் குடை'

ன்

என்னும் பாடலொன்றை மேற்கோள் காட்டுகின்றார். அது கண்டன் அலங்காரத்தைச் சேர்ந்த தாகலாம். இக் கண்டன் மூவேந்தருள் ஒருவன் என்பதும், அவருள் முதல்வன் என்பதும் இப்பாடலால் அறியப் பெறும் செய்தியாம்.

மூவேந்தருள் ஒருவராகிய சோழருள் ராசராசன், வீரராசேந்திரன் என்னும் இருவரும் கண்ட ன் என்னும் பெயருடன் விளங்கினர் என்பது இராசராச சோழன் உலாவாலும், தக்கயாகப் பரணியாலும், வீரசோழிய உரையாலும் அறியக் கிடக்கின்றது.

“கண்ணன் கனகளபன் கண்டன் கதிரோனும் தண்ணென் கவிகைச் சனநாதன்

"புகார்மாத் திருக்குலத்துக் கண்டன்'

“வயிரா கரமெறிந்த மானதன் கண்டன்”

'கண்டனை மேதினியாள் காந்தனை”

“ஒருமகன் கண்டன்'

66

(38)

(257)

(260)

(317)

(359)

என்று இராச ராசனை உலா பாராட்டுகின்றது. “மலைகொன்று பொன்னிக்கு வழிகண்ட கண்டன் வர ராச ராசன்” எனப் புகழ்கின்றது தக்கயாகப் பரணி. அதன் உரை, “கண்டன் என்பது சிறப்புப் பெயர். இதனை இயற்பெயர் என்று மயங்காது ஒழிக. இராசராசன் என்பது இயற்பெயர்” என்று குறிக்கின்றது (549), கண்டனைப் பற்றி ஒட்டக்கூத்தர் பாடியனவாகச் சில மேற் கொள் பாடல்களை இதன் குறிப்புரையில் டாக்டர் ஐயரவர்கள் குறித்துள்ளார்கள். யாப்பருங்கல விருந்தியுள்ளும் (22) வீரசோழியத்துள்ளும் (119) கண்டனைப் பற்றிய மேற்கோட் பாடல்கள் உள. இவற்றைத் தொகுத்துக் காணுங்கால் இக் கண்டன் இராசராசன் என்ற முடிவுக்கே வருதல் கூடும். வீர ராசேந்திரனைப் பற்றிக் கண்டன் என்று கூறும் வழக்கு அத்துணை வலுவாக இல்லை. மேலும் உலாவில் இராசராசன் சனநாதன்' என்று கூறப்பெறுவது போலவே கண்டனலங் காரத்திலும் கூறப்பெற்றுள்ளமை மேலும் வலுவூட்டுகின்றது. * இது பழம்பாடல் எனக் குறிக்கப் பெற்றுள்ளது.