உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

இளங்குமரனார் தமிழ்வளம்

11

களவியற் காரிகையில் “போகக் கட வன புள்ளென் றிருந்திலம்” (336) எனவரும் கட்டளைக் கலித்துறைப் பாடல் கண்ட னலங்காரப் பாடல் ஆகலாம். ஆனால், ‘பழம்பாட்டு' என்று குறிக்கின்றது.

காரிகை

இவ்விராச ராசன் இரண்டாம் குலோத்துங்கன் மைந்தனா கிய இரண்டாம் இராசராசன் ஆவான். இவன் அரியணை ஏறியது கி. பி. 1146 ஆதலால் இந் நூற் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டாம்.

6. கிளவித் தெளிவு

'கிளவி' என்பது 'சொல்' என்னும் பொருள் தருவதொரு சொல். எனினும், அஃது அகப்பொருள் துறை என்பதையும் குறிக்கும். அகப்பொருள் தலைவர் பாட்டுடைத் தலைவர் என்றும், கிளவித் தலைவர் என்றும் இருவகைப் படுவர். அவருள் கிளவித் தலைவராவார் துறைத் தலைவர். ஆகலின், கிளவி என்பது அகத்துறையைக் குறிக்கும் என்பது தெளிவாம்.

இவ்வகையில் அகத்துறையைத் தெள்ளிதின் விளக்கும் ஓர் இலக்கிய நூல் கிளவித் தெளிவு என்க. இந் நூலில் இருந்து நாற்பத்தைந்து பாடல்களைக் களவியற் காரிகை மேற்கோளாகக் காட்டுகின்றது. அனைத்தும் நேரிசை வெண்பாக்களே.

"இது பெரிதும் வெண்பாவினாலும் ஆசிரியப்பாவினாலும் அமைந்த நூல்” என்று மறைந்துபோன தமிழ் நூல்கள் என்னும் நூல் கூறுகின்றது. ஆனால், கிளவித் தெளிவினைச் சேர்ந்ததாகக் களவியற் காரிகை காட்டும் பாடல்களுள் ஒன்றும் அகவற் பாவாக ல்லை. தமிழ்நெறி விளக்கப் பொருளியற் பாக்களையும் கிளவித் தெளிவெனக் காட்டியுள்ளமையால் ஆசிரியப்பா வினையும் சுட்ட வேண்டிய தாயிற்று என்க.

கிளவித் தெளிவு தெளிந்த நடையும், இனிய பொருளமைதியும் ஒருங்கே அமைந்த நூல் என்பதை மேற்போக்காக நோக்குவாரும் உணரக் கூடும். அதன்கண் ‘தில்லை நகர்’ ஒரு பாடலில் (315 குறிக்கப் பெறுகின்றது. திங்களூர் இரண்டு பாடல்களில் (577 583) குறிக்கப் பெறுகின்றது. திங்களூர் வடகொங்கு நாட்டைச் சேர்ந்தது என்பதையும் வெளிப்படுத்துகின்றது (577).

கிளவித் தலைவனே தலைவனாக அமைந்த நூல் இஃது என்பது வெளிப்படுகின்றது.