உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

7. கிளவி மாலை

219

கிளவித் தெளிவு போன்றதொரு நூலே கிளவி மாலையுமாம். இதுவும் கிளவித் தலைவனே தலைவனாக அமைந்த நூலாகலாம். களவியற் காரிகை இந்நூற்பாக்களாக நான்கினைக் காட்டுகின்றது. நான்கும் நேரிசை வெண்பாக்களே.

நான்கு இட ங்களிலும் கிளவித் தெளிவுப் பாடலுடன் இணைந்தே வந்துள. கிளவி மாலைக்கு முன்மை தந்தே உரையாசிரியர் அமைத்துள்ளார்.

“மன்னெடு வேலினாய் மாழை மடநோக்கி

நின்னொடு செல்ல நெடுங்கானம் கொன்னுனைய

வேலன்ன வெம்மைய வாயினும் வேந்தர்செங்

கோலென்ன வாகும் குளிர்ந்து"

என்னம் கிளவிமாலை வெண்ப,

“வேலினும் வெய்ய கானமவன்

கோலினும் தண்ணிய தடமென் தோளே”

என்னும் பட்டினப் பாலையினை நினைவூட்டுதல் அறிக.

8. கிளவி விளக்கம்

(300-1)

இதுவும் கிளவித் தெளிவு, கிளவிமாலை போன்றதொரு நூலாகும். களவியற் காரிகையால் இந்நூலின் மூன்று பாடல்கள் அறியப் பெறுகின்றன. அவையனைத்தும் நேரிசை வெண்பாக் களேயாம்.

இந் நூலின் பாட்டுடைத் தலைவன் வன்னாடன் என்பான்; அவன் ஊர் நெய்தல் வாய் என்பது. அவன் நாட்டின் பெயர் வன்னாடு. இக் குறிப்புகள் மூன்ற பாடல்களிலுமே இடம் பெற்றுள்ளன. வன்னாடன் பெருங் கொடையாளன் என்பது, 'கார்க் கொடையால், வன்கைக்

66

கலிகடந்த வன்னாடன்

என்பதனால் புலப்படுகின்றது. (301)

9. கோயில் அந்தாதி

சைவ உலகில் கோயில் என்பது சிதம்பரத்தையும், வைணவ உலகில் கோயில் என்பது திருவரங்கத்தையும் குறிக்கும். இவற்றுள் திருவரங்கத் திருக்கோயிலில் எழுந்தருளிய அரங்க நாதர் மேல் அகப்பொருள் துறைகள் அமையப் பாடப்பெற்ற