உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

221

சிற்றெட்டகம்' எனவே நூற்பெயரை யாண்டும் வழங்குகின்றது. துவே நூற் பெயராதல் வேண்டுமென்பது பெயரை நோக்கிய அளவானே உணர்தல் கூடும். ஐந்திணைகளுள் ஒவ்வொரு திணைக்கும் எட்டுச் செய்யுள்களாக நாற்பது செய்யுள்கள் கொண்ட சிறியதொரு நூலென்று இதனைக் கோடல் தகும். மேலே காட்டிய அகப்பொருள் விளக்கத்தின் உரை வாக்கியம் கொண்டும், அந்நூலின் ஒழிபியலில் (சூத்திரம் 251) ‘சிற்றட்டகத்துப் பாலைப் பாட்டு' என்று வரும் குறிப்புகள் கொண்டும் இந் நூல் ஐந்திணையையும் குறித்தவொரு முறையை மேற்கொண்டு விளக்குவதென்பது பெறப்படும். 'ஐங்குறுநூற்றின் அச்சுப் பிரதி இறுதியிற் காணப்படுகின்ற 6 செய்யுள்களும் சிற்றெட்டகத்தைச் சார்ந்தவை' என்று அதன் பதிப்பாசிரியராகிய ஸ்ரீ ஐயரவர்கள் ஒரு முறை எனக்குத் தெரிவித்தார்கள். அவ்வாறனுன் ஒன்றாய் 'எம்மூரல்ல தூர்நணித்தில்லை' என்று வருவதனைச் சிற் றெட்டகச் செய்யுளாகவே களவியற் காரிகை யுரையுங் காட்டியிருப்பது கண்டு மகிழத்தக்கது. இந்நூலின் செய்யுள்கள் பல தொல்காப்பிய உரைகளிற் பலவிடத்தும் மேற்கோளாகக் காட்டப்பெற்றுள்ளன

·

சிற்றெட்டகச் செய்யுள்கள் ‘அகவல்’ என்றே கிடைத்துள்ள வற்றால் அறுதியிடலாம். நிலைமண்டிலம், நேரிசை ஆகிய இருவகை அகவற் பாக்களும் இடம்பெற்றுள.

தலைமகள் புருவத்தைப் ‘பூட்டு வில்லுக்கு' ஒப்பிடுகின்றது ஒரு பாட்டு (235). தலைவியின் கண்ணை மலையன் ஒள்வேலுக்கு ஒப்பாக உரைக்கின்றது மற்றொரு பாட்டு (536).

பிற நூல்களில் காட்டப் பெற்றுள்ள சிற்றெட்டகப் பாடல்களுள் ஒன்றில்.

66

“இலவம் ஏறிய மஞ்ஞை

எரிபுகு மகளிர் ஏய்க்கும்”

என்றும்,

மற்றொன்றில்,

“ஈயல், கோல்பிடி குருடர் ஏய்க்கும்”

என்றும் கூறப்பெற்றுள்ளது.

“இல்லிருந்து மகிழ்வோர்க் கில்லையால் புகழ்”

என ஒரு பாட்டுக் கூறுகின்றது.

-தொல். பொருள். 111. நச்.

-தொல். பொருள். 111 நச்.

(தொல். அகத். 24 இளம்; நம்பி. ஒழிபு. 42)