உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

இளங்குமரனார் தமிழ்வளம்

11. தில்லை அந்தாதி

11

தில்லையம் பெருமானைப் பொருளாகப் கொண்டு எழுந்த அந்தாதி நூல் இது. களவியற் காரிகை உரையாசிரியர் இந்நூற் பாடலொன்றைத் தெளிதல் என்னும் கிளவிக்கு மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார் (24). அப்பாடல்,

“அயன் தலையைத் தடிவான்; அரன்; தாழ் சடையோன்; தில்லை”

எனத் தில்லை நகரைக் குறித்துள்ளது.

12. நறையூர் அந்தாதி

இது துறையூரைச் சேர்ந்த நறையூரில் வாழ்ந்த ஒரு வள்ளல்மீது அந்தாதி யாப்பில் பாடப் பெற்ற ஒரு நூலாகும். இந் நூலில் இருந்து ஒரு செய்யுளைக் களவியற் காரிகை மேற் கோளாகக் காட்டுகின்றது (485).

“விரிதமிழின், சொல் அளந்தான்

ஒரு பாவலர்க் காய்த் துறையூர் நறையூர் நெல் அளந்தான் அளந்தான் நெடுநாடு”

எனப் பாட்டுடைத் தலைவனை நயமுறப் பாடுகின்றது. கொடைச் சிறப்பால் 'அளந்தான்” எனப் பாட்டுடைத் தலைவன் பெயர் பெற்றான் போலும்!

13. பல்சந்த மாலை

“சொன்ன கலம்பக உறுப்புவகை நீக்கி மன்னிய பத்து முதல்நூ றளவா

வந்த மரபின் வரூஉஞ் செய்யுள் முதலா வந்தது பல்சந்த மாலை யாகும்

எனப் பன்னிரு பாட்டியலும்,

“பத்து முதலாப் பப்பத் தீறா

வைத்த வண்ண வகைபத் தாகப்

பல்சந்த மாலை பகரப் படுமே’

என இலக்கண விளக்கப் பாட்டியலும் பல்சந்த மாலையின் இலக்கணத்தைக் கூறுகின்றன. பேரைக் கூறுமாற்றானே பலவகை வண்ணங்களை (சந்தங்களை) உடையதொரு நூல் என்பது போதரும். எனினும், இந் நூலில் இருந்து எட்டுச் போதரும்.எனினும், சய்யுள்களே கிட்டியுள்ளமையாலும், கிட்டியுள்ளமையாலும், அவையனைத்தும்