உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியற் காரிகை

223

கட்டளைக் கலித்துறையாகவே இருத்தலானும் பல வகை வண்ணங்களால் இந் நூல் அமைந்ததென்பதை அறுதி யிட்டுரைக்க வாய்ப்பு இல்லாது போயிற்று.

இந்நூல் வச்சிரநாட்டு வகுதாபுரியில் அரசு செய்துவந்த அஞ்சு வன்னம் என்னும் மரபைச் சேர்ந்த ஒரு முகமதிய மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுந்த நூல் என்பது நன்கு புலப்படுகின்றது.

கலுழ்பா வழிவரும் தலைமையர் (50) என்றும், வின்னன் என்னும் பெயரினன் (138) என்றும், வச்சிரநாட்டு வகுதா புரியினர் (157) என்றும், 'செம்முகமானதர்’ (166) என்றும், இயவனர் (365, 588) என்றும், சோனகர் (563) என்றும், அஞ்சு வன்னத்தவர் (365) என்றும், விஞ்சத்து அடவி வரை அவர் நாடியிருந்தது (435) என்றும், கலுபா கலுபதி (365, 435) என்று அழைக்கப் பெற்றனர் என்றும் பல்சந்த மாலைப் பாடல்கள் ணர்த்துகின்றன.

66

அல்லா வெனவந்து தொழுஞ்சீர் நல்லார்” என்றும் ஒருபாடல் (588 குறிக்கின்றது. “வகுதாபுரிக்கு ‘அந்து பார்' என ஒரு பெயரும் இருத்தல் வேண்டும் என்பது ஒரு செய்யுளால் புலப்படுகின்றது” என்று முதற் பதிப்பாசிரியர் குறித்துள்ளார். வகுதாபுரி இந்நாளில் காயற்பட்டினம் என்று வழங்கப்

பெறுகிறது.

14. பழம்பாட்டு

களவியற் காரிகை சில பாடல்களைப் பழம்பாட்டு என்று குறிக்கின்றது. அவற்றுள் பலவும் பல்வேறு உரைகளிலும் ஆளப் பெற்றுள. அப் பாடல்களுள் வரகுணன் என்னும் வேந்தனையும் அவனது தொண்டி, ஆங்கை என்னும் ஊர்களையும் இரண்டு பாடல்கள் (119, 587) குறிக்கின்றன.

சீவலன் என்னும் வேந்தனையும் அவனது களவழி நன்னாட்டையும் ஒரு பாட்டு (318)க் குறிக்கின்றது. கண்டன் என்னம் வேந்தனையும் அவன் புகாரையும் ஒரு பாட்டு (336)க் குறிக்கின்றது. மன்னன் மதுராகனன் என்பவனையும் அவனது தொண்டிமாக்கடலையும் ஒரு பாட்டு (409)க் குறிக்கின்றது.

நாகைவள்ளல் ஒருவனை ஒரு பாட்டு (352)ச் சுட்டுகின்றது. தலைவனைச் செம்பூட்சேய்க்கு ஒப்பிட்டு ஒரு பாடல் பாடு கின்றது (274) ‘பஞ்சநெதி’ ஒரு பாடலில் சுட்டப் பெறுகின்றது (584). 240ஆம் பாடல் எள்ளற்சுவை மிக்கு விளங்குகின்றது.