உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 11.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

இளங்குமரனார் தமிழ்வளம் - 11

பழம்பாட்டு எனக் காட்டப்பெற்றவை வெண்பா, அகவல், கட்ட ளைக் கலித்துறை முதலிய பல்வேறு பாவகைகளைச் சேர்ந்தவை.

15. மழவை எழுபது

மழவையானது மழபாடி. மழபாடியில் கோயில் கொண்ட சிவ பெருமான் மேல் அகப்பொருட்டுறை யமைந்த எழுபது பாடல்களால் ஆகிய நூல் மழவை எழுபது என்பது பெயரால் வெளிப்படுகின்றது.

லை

களவியற் காரிகை, மழவை எழுபதில் இருந்து ஒரு பாட முரசுவினாதல் என்னும் துறைக்கு மேற்கோளாகக் காட்டி யுள்ளது. அப் பாடல் மழவையை, 'மாமழபாடி' என்று கூறு கின்றது. சொற்சுவை, பொருட்சுவை கெழும் அமைந்த நூல் மழவை எழுபது என்பது கிடைத்துள்ள ஒரு பாடலாலும் நன்கு விளங்குகின்றது.

16. மூலம் விளங்காதன

களவியற் காரிகை உரை ஆசிரியரால் பழம்பாட்டு என்று குறிக்கப் பெற்றவை ஒழிய மூலம் விளங்காத பாடல்கள் சில மேற்கோளாக வந்துள.

அவற்றுள் 190, 191ஆம் 190,191ஆம் பாடல்கள் குடந்தையைக் குறிக்கின்றன. 196ஆம் பாடல் கிள்ளியைக் குறிக்கின்றது. 201ஆம் பாடல் பழைய னூரைக் குறிக்கின்றது. 238ஆம் பாடல் அதியன் தலைக்குலத்தையும், 457ஆம் பாடல் பூழியரையும் குறிக்கின்றன. 533ஆம் பாடல் கழுமலம் தந்த செம்பியன் பங்குனி விழாவையும், உறந்தை உள்ளி விழாவையும் குறிக்கின்றது.

ல்

மூலம் விளங்காதவற்றுள் இலக்கண மேற்கோள்களும், இலக்கிய மேற்கோள்களும் உள. பல்வேறு பாவகைகளும் உள.

17. வங்கர் கோவை

களவியற் காரிகை மேற்கோள் காட்டும் கோவை நூல்களுள் வங்கர் கோவை என்பதுவும் ஒன்றாகும். இந் நூல் வங்கர் குலம் என்னும் ஒரு குலத்து வந்த வேந்தன் ஒருவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பெற்ற நூல். இப் பாட்டுடைத் தலைவன்,

"விந்தாசனி கொண்கன்; வேந்தரில் ஆண்பிள்ளை

என்றும்,

(178)